More
Categories: Cinema News latest news

அப்ப ஒரு கோடி.. இப்ப 120 கோடியா? ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் – வேற யாரு?

Actor Kamal Vikram : தமிழ் சினிமாவில் ஏற்படும் பல மாற்றங்கள் சினிமாவின் தரத்தையே எங்கேயோ எடுத்து ச் சென்று போய்க்கொண்டிருக்கின்றன. ஆரம்பகாலங்களில் இருந்து பார்க்கும் போது அதனுடைய பரிமாண வளர்ச்சி  நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. அப்பொழுதெல்லாம் வெறும் ஆயிரங்களில் படம் எடுத்து படத்தை கொடுத்தார்கள்.

ஆனால் பொருளாதார வளர்ச்சி, டெக்னாலஜி என இப்பொழுது 100 கோடி இல்லாமல் ஒரு படத்தை எடுக்க முடியாத நிலையில் தமிழ் சினிமா இருக்கின்றது. 100 கோடி என்பது கூட சாதாரண விஷயம் தான். 500 கோடி என்றால்தான் அது பெரிய பட்ஜெட் படம் என்று சொல்கிறார்கள்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஆதிகுணசேகரனை அடக்கி வாசினு சொன்னா அடுக்குமா? மாரிமுத்து நடிக்க இருந்த மற்றுமொரு சீரியல் எதுனு தெரியுமா?

அந்த பேருக்காகவாவது படத்தை எடுக்கவேண்டும் என்று முண்டியடித்துக் கொண்டு இயக்குனர்கள் வருகிறார்கள். ஆனால் முதன் முதலில் ஒரு கோடி பட்ஜெட்டில் எடுத்தப் படம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெயருக்கு சொந்தமானவர் நடிகர் கமல். அதுவும் விக்ரம் படம்தான். 1986 ஆம் ஆண்டு அவரின் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வெளியான படம்தான் விக்ரம்.

இதையும் படிங்க: என்னப்பா அப்டேட்னு விளையாடிக்கிட்டு இருக்கீங்க… விடாமுயற்சியை விட்டு தொலைங்கையா… காண்டான ரசிகர்கள்!

அந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருப்பார். சத்யராஜ் வில்லனாக நடித்திருப்பார். படம் வசூல் ரீதியாக சக்க போடு போட்டது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படம் விறுவிறுப்பாக சென்று ரசிகர்களிடம் கவனத்தை பெற்றது.

இதுதான் முதன் முதலில் ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படமாம். ஆனால் இப்போது வந்த லோகேஷின் விக்ரம் 120 கோடியில் எடுக்கப்பட்ட 500 கோடி வரைக்கும் வசூல் சாதனையை வென்று விட்டது. மேலும் டெக்னாலஜி சம்பந்தமாக பார்க்கும் போது கேமராவில் ஸ்டெடி கேம் என்ற ஒன்று இருக்கின்றது.

இதையும் படிங்க: இருக்கு ஆனா இல்ல! விஜய் மேல இவ்ளோ பைத்தியமா? நடிகையிடம் ஆசையை தூண்டி வேடிக்கை பார்த்த அட்லீ

அந்த ஸ்டெடிகேம்மையும் அந்த விக்ரம் படத்தின் மூலம் தான் முதன் முதலில் கமல் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Rohini