போட்டுத்தாக்கு! களைகட்டும் நெட்ஃபிளிக்ஸ்.. இந்தாண்டு ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள்

by Rohini |
indian
X

indian

Netflix: திரைக்கு வந்து சில நாள்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் ஏராளம். ஒரு சில பேரால் நேராக திரையரங்கிற்கு சென்று பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அவர்களுக்கு மிகவும் உதவிக்கரமாக இருப்பது இந்த ஓடிடி தளம்தான்.

ஓடிடியிலேயே ஏராளமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஓடிடி நிறுவனம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம். அதிலும் இந்தாண்டு நெட்ஃபிளிகிஸில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகின்றன என்பதை பார்க்க போகிறோம்.

இதையும் படிங்க: வடிவேலுவை அடிச்சேன்! என் வாய்ப்பே போச்சு – மனம் வருந்தி பேசிய தனுஷ் பட நடிகை

ஏற்கனவெ பல தடைகளை தாண்டி படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் விடாமுயற்சி டீம். அந்தப் படத்தை மகிழ்திருமேனி இயக்க அனிருத் இசையமைக்கிறார். அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்தான் வாங்கியிருக்கிறதாம்.

அடுத்ததாக இந்தியன் 2 படம். ஷங்கர் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் இந்தியன் 2.இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமாகும். இந்த படத்தின் ஓடிடி உரிமயை நெட்ஃபிளிக்ஸ்தான் வாங்கியிருக்கிறது.

இதையும் படிங்க: உருட்டு உருட்டு!.. கேப்டன் மில்லர் வசூலை பங்கம் செய்த புளூசட்ட மாறன்..

அதே போல காஞ்சூரிங் கண்ணப்பன், கீர்த்தி சுரேஷின் கன்னிவெடி, விஜய்சேதுபதியின் மகாராஜா, ரிவால்வர் ரீட்டா, சிவகார்த்திகேயனின் எஸ்கே 21, சொர்க்கவாசல், தங்கலான் போன்ற படங்கள் அனைத்துமே இந்தாண்டு ஓடிடி ரிலீஸாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் இந்த வருடம் பல முக்கிய நடிகர்களின் படங்கள் ஒட்டுமொத்தமாக நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸாக இருப்பதால் அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

இதையும் படிங்க: என்னையே வாடா கலாய்க்கிறீங்க? அந்த விஷயமே வேண்டாம்!… தலைவர்171 படத்தில் யூடர்ன் போட்ட ரஜினிகாந்த்!…

Next Story