இது சாதாரண ஸ்குவாடு இல்ல.. போட்டோ போட்டு கெத்து காட்டிய ‘விடாமுயற்சி’ டீம்

Published on: August 20, 2024
ajith
---Advertisement---

Vidamuyarchi: அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தின் படப்பிடிப்பு ஓரளவு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் இன்னும் அந்தப் படத்தில் உள்ள ஒரே ஒரு பாடல் காட்சியை மட்டும் படமாக்க வேண்டியதாக சொல்லப்படுகிறது. எப்படியோ பல பிரச்சனைகளை கடந்து விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சுருளிராஜன் அப்படிப்பட்டவரா? மனைவி கொடுத்த அதிரடி பேட்டி..

இதனை அடுத்து அஜித் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் இன்னும் சில நாட்களில் கலந்து கொள்ள இருக்கிறார். விடாமுயற்சி படத்தை பொறுத்த வரைக்கும் அஜித்துடன் சேர்ந்து திரிசா அர்ஜுன் ஆரவ் ரெஜினா போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

இன்னும் இந்த படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. படம் எப்படியும் அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதையும் படிங்க: வாடிவாசல் ட்ராப்புனு யாரும் சொல்லாதீங்க… சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்தான்!..

ஆனால் அதிகாரப்பூர்வமான செய்தி இன்னும் வெளியாகவில்லை. ஆனால் தீபாவளிக்கு படத்தை எப்படியாவது கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் ஒட்டுமொத்த பட குழுவும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விடாமுயற்சி படம் ஒரு ஆக்சன் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

arjun
arjun

படத்தின் ஒவ்வொரு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய விடாமுயற்சி பட குழு இன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. அதில் அஜித் த்ரிஷா ரெஜினா ஆரோ அர்ஜுன் என ஒட்டு மொத்த கேங்கும் அந்த புகைப்படத்தில் இருக்கிறார்கள். அந்த ஒரு போட்டோ தான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: வாயா பேசுற நீ? திரிஷாவுக்கு கவுண்டர் கொடுத்த உதவி இயக்குனரை நடிக்க வைத்த மணிரத்னம்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.