இரண்டு மந்தையில் இருந்த ஆடுகள் மீண்டும் இணைய உள்ளன.! இது வெறும் பழமொழிதான்பா.!
பல்வேறு திரை பிரபலங்களை சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு அறிமுகப்படுத்துவதில் முதன்மையான தொலைக்காட்சி விஜய் டிவி சேனலாக உள்ளது. இந்த டிவியில் இருந்து பல்வேறு திரைப்பிரபலங்கள் திரைக்கு வந்துள்ளனர். அதில், சந்தானம், சிவகார்த்திகேயன் முதல் தற்போதைய புகழ், சிவாங்கி வரை இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின்னர் பெரிய வாய்ப்புகள் கிடைத்து பெரிய திரைக்கு வந்து தற்போது முன்னணி நடிகர்களுக்கு போட்டி போடும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
அதேபோல, விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் சாய்பல்லவி அதன் பின்னர் மலையாள திரையுலகில் உருவான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ் தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சாய்பல்லவி தமிழை விட தெலுங்கில் அவருக்கு மார்க்கெட் அதிகம்.
தற்போதைய செய்தி என்னவென்றால் விஜய் டிவியிலிருந்து பெரிய திரைக்கு சென்ற சிவகார்த்திகேயனும், சாய் பல்லவி தற்போது புதிய படத்தில் இணையவுள்ளனர்.
இதையும் படியுங்களேன்- கெட்ட வார்த்தை டீ-ஷர்ட்.! வெறுப்பேற்றிய சமந்தா.! கொந்தளித்த குடும்பம்.!
இப்படத்தை தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கவுள்ளார். இப்படத்தில், இரண்டு ஹீரோயின்கள் ஒருவர் வெளிநாட்டு ஹீரோயின் இன்னொருவர் நம் நாட்டில் ஹீரோயின் அதே நம்நாட்டு ஹீரோயினாக நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்துதாம். தற்போது அது உறுதியாகி உள்ளதால் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.