Cinema History
எந்த நடிகரும் நெருங்காமல் பார்த்துக் கொண்ட நடிகையின் தந்தை! சினிமாவில் மகளை பெரியாளாக்க அப்பா எடுத்த முயற்சி
Veteran Actress Banumathi: தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் எப்படியாவது தன்னை உலகம் அறியவேண்டும், பெரிய புகழை அடைய வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் நடிக்க வருவார்கள். ஆனால் சினிமாவில் நடிக்க துளி கூட விருப்பமில்லாமல் வந்தவர்தானாம் பானுமதி.
ஆனால் சினிமாவில் அவர் அடைந்த உச்சம் யாராலும் மறக்க முடியாது. நடிகையாக, தயாரிப்பாளாராக , பாடகியாக, ஒரு இயக்குனராக என சினிமாவில் இருக்கும் அனைத்துத் துறைகளிலும் பணிபுரிந்து ஒரு பன்முகக் கலைஞராக மக்கள் மத்தியில் சிறப்பான அங்கீகாரத்தை பெற்றார்.
இதையும் படிங்க: இணையத்தில் கசிந்த லியோ படத்தின் கதை? அப்போ சஞ்சய் தத்துக்கும் விஜய்க்கும் இந்த உறவு தானா?
எப்படியாவது தன் மகளை இந்த உலகம் பாராட்டவேண்டும். அதற்கு ஒரு ஊடகமாக இருப்பது சினிமா மட்டும்தான் என்று நினைத்து பானுமதியை சினிமாவில் நடிக்க கட்டாயப்படுத்தியது அவரது தந்தைதானாம்.
அதனால் முதலில் பாட்டு க்ளாஸில் சேர்த்துவிட்டாராம். ஆனால் பானுமதி சினிமாவில் நடித்தால் இந்த ஊர் தன்னை ஒரு மாதிரியாக பார்க்கும். நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் யாரும் சினிமாவில் நடிக்க மாட்டார்கள். அதுவும் ஒரு நடிகையாக இருந்தால் கல்யாணமே நடக்காது என்ற ஒரு பயத்தினால் பானுமதி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னாராம்.
இதையும் படிங்க: உலக நாயகனை இப்படி பண்ணது நீ ஒருத்தன்தான்!.. விக்ரம் படத்தில் லோகேஷ் செஞ்ச வேலை!..
ஆனால் அதற்கு அவரது அப்பா உனக்கு எந்த இடையூறும் வராதவாறு நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்று கடைசிவரை பானுமதியின் கூடவே இருந்தாராம். அந்தக் காலத்தில் காதல் காட்சிகள் என்றால் எப்படி இருக்கும்?
கை கோர்த்து நடப்பது. ஒருவர் தோளின் மீது ஒருவர் சாய்வது. இப்படித்தான் இருக்குமே தவிற இன்றைய கால காதல் மாதிரி முத்தக்காட்சிகள் எல்லாம் இருக்காது. ஆனால் அதிலும் தன் மகளை எந்த நடிகரும் தொட்டு நடிக்கக் கூடாது என கண்டீசன் போட்டே படங்களை ஒப்பந்தம் செய்வாராம் பானுமதியின் அப்பா.
இதையும் படிங்க: ஒன்னு கேட்டா ஒன்னு ஃப்ரீ! இமான் சிவகார்த்திகேயன் இடையே இதுதான் நடந்தது – டபுள் டிரீட் வைத்த பயில்வான்
எந்த கதாநாயகனையும் பானுமதியை தொட அனுமதிக்கவே இல்லையாம் அவரது தந்தை. இப்படி பல விதிமுறைகளின் படி சினிமாவிற்கு வந்தும் பானுமதியால் புகழ் பெற முடிந்தது என்றால் அது கடவுளின் சித்தம் தான் என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.