கோட் படம் காப்பி அடிக்கும் அந்த ஜெமினி மேன் படக்கதை தெரியுமா? அட கேட்கவே செம மாஸா இருக்கே!

Published on: January 6, 2024
---Advertisement---

Geminiman: தமிழ் சினிமாவில் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் படம் ஹாலிவுட்டின் ஜெமினி மேன் படத்தின் காப்பி என்ற தகவல் இணையத்தில் உலா வருகிறது. அப்போ அந்த உண்மையான கதையை தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறீங்களா? அப்போ இது உங்களுக்கு தான். திறமையான ஸ்நைப்பரை க்ளோன் பண்ணா என்ன நடக்கும். அதோட பின்விளைவுகள்தான் ஜெமினி மேன் படம்.

வில் ஸ்மித் துணிச்சலா தன்னோட உண்மையான வயசைச் சொல்லி எனக்கு 50 வயசுனு சொல்லி நடிச்சதுக்காகவே கொண்டாடப்பட்ட படம். மனுஷன் 51 வயசுனு ஒப்பனா சொல்றதும் அந்த வயசுக்கே உண்டான நிறை, குறைகளோட நடிச்சதுக்கும் அவரை எவ்வளவு பாராட்டுனாலும் தகும். படம் ஆரம்பிக்குறதே ஒரு ஸ்நைப்பர் ஷாட்டோடதான் தொடங்கும். கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துல இருந்து பறக்கும் புல்லட் டிரெயினில் ஒரு டார்கெட்டை சரியா சுட்டுத் தாக்குவார் ஹீரோ.

இதையும் படிங்க: வேற மொழிப்படங்களா?.. நோ நோ.. தமிழ்ப்படங்களில் மட்டுமே கெத்து காட்டிய நடிகர்கள்…

தீவிரவாதிகள், சமூகத்தை அச்சுறுத்தும் நபர்களைக் களையெடுப்பதாக ஹீரோ நினைத்துக் கொண்டிருக்க, அவரின் தனித்திறமையை காசாக்கும் முயற்சியில் ஒரு பெரிய நெட்வொர்க்கே செயல்பட்டுக் கொண்டிருக்கும். படத்தின் ஓபனிங் ஷாட்டில் ஹீரோவின் டார்கெட்டான நபர் தீவிரவாதி இல்லை என்பதை நண்பர் ஒருவரின் உதவியோடு ஹீரோ கண்டுபிடிக்கிறார்.

அதன்பிறகு சிஐஏ டீம் தன்னைக் கண்காணிக்க வருவதையும் தெரிந்துகொள்ளும் அவர், கண்காணிப்பதற்காக வந்திருக்கும் ஹீரோயினுக்கு உண்மையைச் சொல்ல வேண்டிய நிலை. தன்னைக் கொல்ல வந்திருக்கும் நபர்களை சம்பவம் செய்துவிட்டு ஹீரோயினை அழைத்துக் கொண்டு அமெரிக்காவை விட்டே பழைய நண்பர் ஒருவர் உதவியோடு வெளியேறுகிறார். அப்படி அவர்கள் தங்கும் இடத்தை சரியாகக் கண்டுபிடித்து அவரைக் கொல்ல வருகிறார் ஒரு டிரெயிண்டு கில்லர்.

அவரை முதல்முறையாக நேரில் பார்க்கும் ஹீரோ, அந்த கொலைகாரன் தன்னுடைய இளம் வயது தோற்றத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் தன்னுடைய குளோன்தான் என்றும், ஏற்கனவே தான் வேலை பார்த்த தன்னுடைய ஹேண்டிலரின் நிறுவனமான ஜெமினி நிறுவனத்தின் அடியாள்தான் அவர் என்பது தெரிகிறது. இதனால்தான் படத்துக்கும் ஜெமினி மேன் என்று தலைப்பிட்டிருப்பார்கள். 

இதையும் படிங்க: விஜய் டிவி புகழ் அமுதவாணனுக்கு மனைவி கொடுத்த சர்பரைஸ் கிஃப்ட்! என்ன ஒரு ஆனந்தம்? வைரலாகும் புகைப்படம்

உண்மையை எல்லாம் தெரிந்துகொண்ட ஹீரோவுக்கும் குளோனுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள், அவர்களுக்கு என்ன ஆனது, வில்லனின் முடிவு என திரைக்கதை பரபரபரக்கும். படத்தின் முடிவு சுபம்தான் என்றாலும் அதன் தாக்கம் ரசிகர்களிடம் அதிகமாகவே இருந்ததைப் பார்க்க முடியும். வெங்கட்பிரபுவின் திரைக்கதையில் விஜய் இதை வெள்ளித்திரைக்குக் கொண்டுவந்தால் நிச்சயம் சூப்பர்ஹிட்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.