இதுவும் திருட்டு ஆடு தானா!.. ஓடிடியில் இருந்து உருவிட்டாராம் வெங்கட் பிரபு!.. விஜய் படம் இவரோட கதையா?

Published on: December 31, 2023
---Advertisement---

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 68வது படத்துக்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழில் போஸ்டர் கூட வெளியாகாமல் ஒன்லி இங்கிலீஷ் கார துரை போல விஜய் படத்துக்கு The Greatest of All Time என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சரியான திருட்டு கேடியின் கதை தான் இந்தப் படமே என புதுசாக போஸ்டரை பார்த்தே உருட்ட ஆரம்பித்து விட்டனர்.

1971ம் ஆண்டு விமானத்தை கடத்தி அமெரிக்காவிடம் பல கோடி பணத்தை வாங்கிக் கொண்டு பயணிகளை விடுவித்து விட்டு மீண்டும் விமானத்தை பறக்கச் சொல்லி பாராசூட்டில் கட்டிக் கொண்டு கொள்ளையடித்து மாயமான டி.பி. கூப்பர் என்பவரின் கதையைத் தான் விஜய்யை வைத்து வெங்கட் பிரபு கிண்டிக் கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்.பி.ஐ அதிகாரிகளுக்கே கடைசி வரை தண்ணிக் காட்டிய கூப்பர் இது வரை என்ன ஆனார் என்றும் அவர் கொள்ளையடித்த பணம் என்ன ஆனதும் என்றும் தெரியவே இல்லையாம்.

இதையும் படிங்க:என்னம்மா ஒன் சைடு காத்து வாங்குது!.. ரெடின் கிங்ஸ்லியுடன் செம ரொமான்ஸ்.. சங்கீதாவை பார்த்தீங்களா!..

ஆஜித்துக்கு கிண்டிய மங்காத்தா படம் போல ஒரு படமும் சிம்புவுக்கு பண்ண மாநாடு படம் போல ஒரு படமும் கேட்ட விஜய்க்கும் இரண்டு படங்களையும் மிக்ஸ் செய்த மாதிரி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இடம்பெற்றுள்ள ஐ எம் கூப்பர் ஆவணப்படத்தில் இருந்து ஆட்டையைப் போட்டு வெங்கட் பிரபு இந்த படத்தை பண்ணி வருவதாக கூறுகின்றனர்.

அதெல்லாம் இல்லைங்க இது கன்ஃபார்மா வில் ஸ்மித் ஜீனை வைத்து அவருக்கு எதிராக உருவாக்கப்பட்ட எதிரி அவருடைய யங் வெர்ஷனான இன்னொரு வில் ஸ்மித் என டபுள் ஆக்‌ஷனில் நடித்திருக்கும் ஜெமினி மேன் தான் என இன்னொரு உருட்டையும் உருட்டி வருகின்றனர். கோட் டைட்டில் லீக்கானதை போலவும் லியோ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படம் தான் என ஏற்கனவே கசிந்தது போல இந்த படத்தின் உண்மை கதையும் விரைவில் வெளியாகி விடும்.

இதையும் படிங்க: அழ ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!.. புத்தாண்டுக்கு ஒரு அப்டேட் கூட இல்லையே.. ரொம்ப பாவம்ப்பா!..

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.