விஜயகாந்த்துடன் பல முறை மோதிய சூர்யா??... இதை யாருமே கண்டுக்கலை போலயே!!
நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் ஒரு பக்கம் போட்டிப்போட்டுக்கொண்டிருக்க, அனைத்து தரப்பிலான ரசிகர்களையும் தனது சிறந்த கதைத் தேர்வுகளின் மூலம் கவர்ந்து இழுத்து வருகிறார் சூர்யா.
சூர்யா “நேருக்கு நேர்” என்ற திரைப்படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த “பெரியண்ணா” என்ற திரைப்படத்தில் நடித்தப் பிறகு சூர்யா பரவலாக அறியப்பட்டார். இந்த நிலையில் விஜயாகாந்த் திரைப்படங்களுடன் சூர்யா படங்கள் ஒரே நாளில் மோதி ஹிட்டும் அடித்துள்ளன. அவ்வாறு சூர்யா நடித்த எந்தெந்த திரைப்படங்கள் விஜயகாந்த் திரைப்படங்களோடு மோதின என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
உளவுத்துறை-காதலே நிம்மதி
1998 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “உளவுத்துறை”. இத்திரைப்படம் விஜயகாந்த் கேரியரிலேயே மிக முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
“உளவுத்துறை” திரைப்படம் வெளியான அதே நாளில் சூர்யா நடித்த “காதலே நிம்மதி” என்ற திரைப்படமும் வெளிவந்தது. ஆனால் “காதலே நிம்மதி” திரைப்படம் சரியாக ஓடவில்லை.
தர்மா-சந்திப்போமா
1998 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் “தர்மா”. இதில் விஜயகாந்த், பிரீத்தா விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதே போல் “தர்மா” திரைப்படம் வெளியான இதே நாளில் சூர்யா நடித்த “சந்திப்போமா” திரைப்படமும் வெளியானது. சூர்யாவுக்கு ஜோடியாக இத்திரைப்படத்திலும் பிரீத்தா விஜயகுமாரே நடித்திருந்தார். எனினும் “சந்திப்போமா” திரைப்படம் அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை.
வாஞ்சிநாதன்-ஃப்ரண்ட்ஸ்
2001 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளியான திரைப்படம் வாஞ்சிநாதன். இதில் விஜயகாந்த், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
மேலும் இதே நாளில் விஜய், சூர்யா ஆகியோர் நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படமும் வெளியானது. இத்திரைப்படம் மாபெரும் வெற்றித்திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தவசி-நந்தா
2001 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் “தவசி”. இதில் விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். குறிப்பாக இதில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. இத்திரைப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியை அளித்தது.
இதையும் படிங்க: நடு ராத்திரியில் கேட்ட அலறல் சத்தம்… வடிவேலு செய்த செயலால் நடிகைக்கு நேர்ந்த சோகம்… அடக்கொடுமையே!!
இதே நாள் சூர்யா நடித்த “நந்தா” திரைப்படமும் வெளியானது. சூர்யாவின் கேரியரையே திருப்பிப்போட்ட படம் என்று இத்திரைப்படத்தை கூறலாம். அந்த அளவுக்கு மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு பின் சூர்யாவுக்கு அதிக பட வாய்ப்புகள் வரத்தொடங்கின. “நந்தா” திரைப்படம் மாபெறும் வெற்றித் திரைப்படமாகவும் அமைந்தது.