Categories: Cinema News latest news

கிணத்தயே மறைச்சிருக்காங்கே! ‘லியோ’வில் மெயின் வில்லனே இவர்தானாம்! ஆண்டவரே இதுக்குத்தானா?

Leo: விஜயின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் லியோ. இந்த படத்தை லோகேஷ் இயக்க லலித் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். படத்திற்கு இசை அனிருத். முதல் இரண்டு சிங்கிள்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இன்று லியோ படத்திற்கான டிரெய்லரை படக்குழு வெளியிடுகின்றது. அதற்காக ஒரு சில திரையரங்குகளில் சிறப்புக் காட்சி வைக்கப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு விழாதான் நடக்கவில்லை. டிரெய்லரையாவது கொண்டாடுவோம் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: செல்லாது செல்லாது!. இவரு ஆதி குணசேகரனா?!.. பொங்கும் ரசிகர்கள்!. எதிர் நீச்சலுக்கு வந்த சோதனை!…

இந்த நிலையில் லியோ படத்திற்காக டப்பிங் பேச கமல் வந்ததாகவும் கூடவே விஜய், லோகேஷ் இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. அதுவும் கமல் டப்பிங் பேசி முடிக்கிற வரைக்கும் விஜய் டப்பிங் தியேட்டரிலேயே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஒரு வேளை பொன்னியின் செல்வன் படத்தில் ஆரம்பத்தில் கமல் வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பார். அதே மாதிரியான ஒரு வாய்ஸ் ஓவரை லியோ படத்திலும் கொடுத்திருக்கிறாரா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்தது. ஆனால் கமலை பொறுத்தவரைக்கும் ஏற்கனவே செய்த செயலை மறுபடியும் பண்ண மாட்டார் என்று சொல்கிறார்கள்.

இதையும் படிங்க: சேட்டைப்பிடிச்ச லோகி முதல் வெல்கம் பேக் அனுஷ்கா வரை… இந்த வார அக்டோபர் ஓடிடி ரிலீஸ்..!

அதனால் ஒரு சின்ன கேமியோ ரோலாகக் கூட இருக்கலாம். அதுக்காக டப்பிங் பேச வந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இதை எல்லாவற்றையும் தாண்டி லியோ படத்தின்  மெயின் வில்லனாக ரோலக்ஸ்தான் வரப்போகிறார் என்ற ஒரு தகவலும் கசிந்து வருகிறதாம்.ஆனால் ரோலக்ஸாக சூர்யாவை காட்டாமல் படத்தில் அவர் பெயரை மட்டும் உச்சரிக்கும் படி லோகேஷ் செய்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அதனால் லியோ படம் கண்டிப்பாக LCUவில் தான் வருகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த லியோ படத்தின் தொடர்ச்சி சூர்யாவை வைத்து ரோலக்ஸ் படத்தை எடுக்கும் போது தொடரும் என்றும் சொல்கிறார்கள்.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: செழியனை ப்ளாக்மெயில் செய்து தன் கைப்பிடியில் வைத்த மாலினி…! கோபிக்கு வந்த பெரிய ஆப்பு!

Published by
Rohini