இரத்தக்கண்ணீர் உருவான கதை! பல கஷ்டங்களை கடந்து சாதனை படைத்த எம்.ஆர்.ராதா
Actor M.R.Radha: நடிப்பிற்கே இமயம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இவரையே மெய்சிலிர்க்க வைத்த இரு நடிகர்கள் என்றால் ஒன்று எம் ஆர் ராதா மற்றொருவர் டி எஸ் பாலையா. இதில் எம் ஆர் ராதா நாடக மேடையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர். ரத்தக்கண்ணீர் என்று சொன்னதுமே நாம் நினைவுக்கு வரும் முதல் நபர் எம் ஆர் ராதா தான்.
அந்த அளவுக்கு இந்த படம் இன்றளவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற ஒரு படமாக கருதப்படுகிறது. எம் ஆர் ராதா முதன்முதலில் 1937 ஆம் ஆண்டு ராஜசேகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு இவருடைய உயரம் வளர்ச்சி அடைந்ததா என்றால் இல்லை.
இதையும் படிங்க: இவனுங்களை நம்பி ஏமாந்துட்டேன்!.. லோகேஷ் கனகராஜால் கடுப்பானாரா பிரபல இயக்குனர்?!..
மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான வாசன் எம் ஆர் ராதாவுக்கு இரு படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த இரு படங்களும் எம் ஆர் ராதாவுக்கு ஒரு சரியான வெற்றியை தரவில்லை. அதன் பிறகு மீண்டும் எம் ஆர் ராதா மீண்டும் நாடகம மேடைக்கு சென்றார். அதன்மூலம் உருவான நாடகம்தான் ரத்தக்கண்ணீர்.
அந்த காலத்தில் தொழில் நுட்ப வசதி சரிவர இல்லாமல் இருந்தாலும் குஷ்ட நோயாளியாக தத்ரூபமாக தன்னுடைய மேக்கப் ஒப்பனையை தானே செய்து கொண்டார் எம் ஆர் ராதா. அவருடைய மேக்கப்பால் அவர் பக்கத்தில் செல்லவே அனைவரும் தயங்கினார்கள். அந்த அளவுக்கு அந்த மேக்கப் பயங்கரமாக இருந்தது.
இதையும் படிங்க: உங்க அப்பா எங்க? ரோகினியை படுத்தும் விஜயா… முத்துவை நெருங்கும் பிரச்னைகள்!…
அதில் பல நடிகைகளை நடிக்க வைக்க பல முயற்சிகள் எடுத்தும் யாரும் நடிக்க முன்வரவில்லை. துணிந்து நடிக்க முன்வந்தவர் எம் என் ராஜம். அந்தக் காலத்தில் வெற்றி பெற்ற நாடகங்களை தான் படங்களாக எடுப்பார்கள். அந்த வகையில் ரத்தக்கண்ணீர் நாடகத்தையும் படமாக்க முடிவு செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் அதிபரான பெருமாள் முதலியார்.
அதை எம் ஆர் ராதாவிடம் சொல்ல எம் ஆர் ராதா மூன்று நிபந்தனைகளை விதித்தார். ஒன்று படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நாடகத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு இருந்தால் நாடகத்திலும் நடிக்க சென்று விடுவேன். இன்னொன்று கேமராவின் போக்கிற்கு நான் நடிக்க மாட்டேன். நான் எங்கெல்லாம் போகிறேனோ அந்தப் பக்கம் எல்லாம் கேமரா தான் வர வேண்டும்.
இதையும் படிங்க: அப்ப விரட்டி விட்டாங்க!.. இப்ப கூப்பிடுறாங்க!.. இந்தியன் 2 அனுபவம் பேசும் சமுத்திரக்கனி…
கடைசியாக இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகையாக கே பி சுந்தராம்பாள் தான் இருக்கிறார். அவரை விட 25 ஆயிரம் கூடுதலாக எனக்கு இந்த படத்திற்கு சம்பளம் தர வேண்டும் என இந்த மூன்று நிபந்தனைகளை விதித்தார்.இருந்தாலும் பெருமாள் முதலியார் எதற்கும் அசையாமல் இந்த மூன்று நிபந்தனைகளுக்கும் உட்பட்டு அந்த படத்தை எடுத்தார். அதன் பிறகு அந்தப் படம் எந்த அளவு ஒரு வெற்றியைப் பெற்றது என அனைவருக்கும் தெரியும்.