சத்தியராஜை ரசிகர்களிடம் ஃபேமஸ் ஆக்கிய வசனத்தை சொன்னவர் இவர்தானாம்!. அட இது தெரியாம போச்சே!..

by சிவா |
sathyaraj
X

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து முன்னேறியவர்தான் சத்தியராஜ். துவக்கத்தில் பல படங்களில் ஒரே ஒரு காட்சியில் வந்து வில்லன் நடிகரிடம் ‘யெஸ் பாஸ்’ என ஒரு வசனம் மட்டும் பேசும் அடியாளாக வந்து போனார். அதன்பின் வில்லனின் முக்கிய அடியாளாக நடிக்கும் புரமோஷன் கிடைத்தது.

80களில் பல திரைப்படங்களில் இவருக்கு கற்பழிப்பு காட்சிகள் இருக்கும். அதில் நடித்து பெண்களிடம் திட்டு வாங்கியவர்தான் சத்தியராஜ். பாரதிராஜா இவரை வைத்து கடலோரக் கவிதைகள் படத்தை எடுத்தார். அது அவர் மீது இருந்த இமேஜை மாற்றியது. அப்போதுதான் மணிவண்னனின் நட்பு அவருக்கு கிடைத்தது.

இதையும் படிங்க: இரவோடு இரவாக கேப்டன் செய்த வேலை!.. ஆடிப்போய் சத்தியராஜ் செய்த காரியம்…

சத்தியராஜை வைத்து மணிவண்ணன் எடுத்த நூறாவது நாள் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மொட்டைத்தலை, ரவுண்டு கண்ணாடி என வித்தியாசமான லுக்கில் வந்து ரசிகர்களிடம் பிரபலமானார் சத்தியராஜ். அதன்பின் சில படங்களில் நடித்தாலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் எடுத்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு திரைப்படம் சத்தியராஜை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியது.

அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் ஹீரோவாக நடித்தார். மணிவண்ணனுக்காக அமைதிப்படை படத்தில் வில்லன், ஹீரோ என இரண்டு வேடங்களிலும் வந்து அசத்தினார். இந்த படத்தின் வசனங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. சத்தியராஜு பேசிய சில வசனங்கள் ரசிகர்களிடம் பிரபலமானது. இப்போது குணச்சித்திர நடிகராக கலக்கி வருகிறார்.

இதையும் படிங்க: ரஜினி கமல் ஜெயிக்கிறதுக்கு இதுதான் காரணம்!. நான்தான் கோட்டை விட்டேன்!. காலம்போன காலத்தில் புலம்பும் சத்தியராஜ்!…

காக்கி சட்டை படத்தில் அவர் பேசிய தகடு தகடு வசனம் மிகவும் பிரபலமானது. இதன்பின் ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி, சத்தியராஜ் இணைந்து நடித்த திரைப்படம் மிஸ்டர் பாரத். இந்த படத்தில் தகடு தகடு போல ஒரு வசனத்தை சத்தியராஜ் பேசினால் நன்றாக இருக்கும் என ஏவிஎம் நிறுவனம் நினைத்தது.

umapathy

அப்படி அவர்கள் முடிவு செய்தபோது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது ஆனந்த் தியேட்டர் அதிபர் உமாபதி. அவர் யாரை பார்த்தாலும் ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா?’ என கேட்பார். அதையே இந்த படத்தில் சத்தியராஜை பேச வைத்தனர். மேலும் அதையே பல்லவியாக வைத்து ஒரு பாடலையும் உருவாக்கினார். இரண்டுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதே உமாபதியைத்தான் மணிரத்னம் தான் இயக்கிய அக்னி நட்சத்திரம் வில்லனாக படத்தில் நடிக்க வைத்தார். அதேபோல், மணிவண்ணன் எழுதிய ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்களே’ என வசனமும் சத்தியராஜுக்கு புகழை பெற்று தந்தது.

இதையும் படிங்க: சுருளிராஜன் சொன்ன அட்வைஸ்!.. அப்படியே ஃபாலோ பண்ண சத்தியராஜ்.. இது செம மேட்டரு!..

Next Story