ஓடிடியில் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட 5 திரைப்படங்கள்! அங்கேயும் இவங்க ராஜ்ஜியம்தான்
OTT Movies: சினிமா ரசிகர்களை இரு வகைகளாக பிரிக்கலாம். ஒரு சாரார் கதையை மட்டுமே நம்பி படம் பார்க்க வருபவர்கள். இன்னொரு சாரார் படம் பிரம்மாண்டமாக இருக்கிறதா இல்லையா என்பதற்காக மட்டுமே வருவார்கள். தயாரிப்பாளர்களை பொறுத்தவரைக்கும் ரசிகர்களை கவர்வதற்காக தங்கள் படங்களில் எப்படியெல்லாம் பிரம்மாண்டத்தை கொட்டலாம் என்று நினைத்தே படம் எடுத்து வருகிறார்கள்.
அதற்காக அதிக முதலீடுகளை போட்டு படம் எடுக்கிறார்கள்.அதுவும் இப்போது டிஜிட்டல் தளங்கள் ரசிகர்களின் விருப்பமாக மாறியிருக்கிறது. அதற்காக எடுத்த படங்களை அதிக விலைக்கு கொடுத்து ஓடிடியிலும் விற்று விடுகின்றனர். அந்த வகையில் ஓடிடியில் அதிக விலை கொடுத்து வாங்கிய முதல் ஐந்து படங்களை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படிங்க: ஓரக்கண்ணால பாத்தே உசுரு போகுதே!.. இளசுகளை காலி செய்த பிரியங்கா மோகன்!..
லியோ: மாஸ்டர் என்ற ப்ளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு லோகேஷும் விஜயும் இணையும் படமாக லியோ படம் அமைந்தது. அதனால் இவர்கள் கூட்டணியில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் லியோ படத்திற்கு முன்பு வரை லோகேஷின் அனைத்து படங்களும் பெரும் வரவேற்பை பெற்றன. ஆனால் லியோ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. விஜய் என்றாலே ஒரு பிஸினஸ் இருக்கத்தான் செய்யும். அதனாலேயே இந்தப் படத்தின் உரிமையை 120 கோடிக்கு விற்றிருக்கின்றனர்.
ஜெய்லர்: நெல்சன் இயக்கத்தில் ஒரு பக்கா ஆக்ஷன் படமாக வெளியான திரைப்படம்தான் ஜெய்லர். இதில் ரஜினி ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக மாறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருப்பார். நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் பெரும் விமர்சனத்தை பெற்றதால் ஜெய்லர் படத்தின் வெளியீட்டு வணிகத்தைக் குறைத்தது. இருந்தாலும் இதன் டிஜிட்டல் உரிமையை ஒரு பிரபல நிறுவனம் 100 கோடிக்கு வாங்கியதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஆசையா இருந்த விஜயாவுக்கு ஆப்படித்த ரோகிணி… மனோஜ் இந்த பேச்சுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல!
பொன்னியின் செல்வன்: மணிரத்னம் இயக்கத்தில் அனைவருமே எதிர்பார்த்த திரைப்படமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் அமைந்தது. திரளான நட்சத்திர பட்டாளத்துடன் இந்தப் படம் வெளியானது. வசூலிலும் வாரி இறைத்தது. இதன் இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றிப்பெற்றது. இதன் டிஜிட்டல் உரிமையை சுமார் 125 கோடிக்கு விற்றிருப்பதாக கூறப்படுகிறது.
வாரிசு: பெரும் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. ஆனால் வெளியானதில் இருந்து விஜயின் படங்களில் அதிக மீம்ஸ்களுக்கு சொந்தக்காரனாக வாரிசு திரைப்படம்தான் அமைந்தது. ஒரு பக்கம் சீரியல் என விமர்சித்தார்கள். பூவே உனக்காக ஸ்டைலை இப்பொழுது கொண்டு வந்தால் ஏற்பார்களா? என்றும் கூறினார்கள். ஆனால் விஜய்க்கே உரிய மாஸ் இந்தப் படத்திலும் அமைந்ததுதான் சிறப்பு. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை 80 கோடிக்கு விற்றிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: யாருக்கும் பாரமா இருக்க மாட்டேன்!.. உயில்லையே இத எழுத போறேன்!.. எஸ்.பி.பி சொன்னது இதுதான்!..
துணிவு : அஜித்தின் ஸ்டைலையே மாற்றிய திரைப்படமாக துணிவு திரைப்படம் அமைந்தது. ஒரு வங்கிக் கொள்ளையனாக அஜித்தின் கதாபாத்திரம் மெருகேற்றியது. அஜித் மூன்றாவது முறையாக எச்.வினோத்துடன் இணைந்த படம்தான் துணிவு. அதனால் மீண்டும் மீண்டுமா என்று ரசிகர்கள் சலசலப்பிற்கு ஆளானார்கள். இந்தப் படமும் ஒடிடியில் அதிக விலைகொடுத்துதான் வாங்கப்பட்டிருக்கிறது. சுமார் 65 கோடி வரை டிஜிட்டல் உரிமையில் விலை போயிருக்கிறது துணிவு திரைப்படம்.