சிவாஜிக்கு அவர் நடித்த கதாபாத்திரத்தில் மிகவும் பிடித்தது! அதை பாராட்டியது யாருனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

by Rohini |
sivaji
X

sivaji

எத்தனையோ கதாபாத்திரம்! எத்தனையோ படங்கள்! அவர் மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் மூலமாக ரசிகர்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரது நினைவு நாளை கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தினமும் அவரைப் பற்றி நினைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

sivaji

sivaji

அந்த அளவுக்கு சினிமாவில் ஒரு அங்கமாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் சிவாஜி கணேசன். நடிப்பு பல்கலைக் கழகம், நடிப்பு அரக்கன், நடிப்பு கிருக்கன் என சிவாஜியை நடிப்பிற்கு இணையாக எத்தனை அடைமொழிகள் கொடுத்து அழைத்தாலும் அது தகும். சினிமாவிலேயே ஊறிப் போயிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். தான் நடைமுறை வாழ்க்கையில் பார்க்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மனதில் ஏற்றி கொண்டு அதற்கேற்றாற்போல கதாபாத்திரம் வரும் போது அப்படியே பிரதிபலிக்கக் கூடிய கலைஞர் சிவாஜி.

இதையும் படிங்க : எல்லாம் வேஷம்! ஞானினு காட்ட இப்படியெல்லாம் பண்றாரு – இளையராஜாவை விமர்சிக்கும் பிரபலம்..

இப்படித்தான் தன்னுடைய கதாபாத்திரத்தை செதுக்கியிருக்கிறார். உதாரணமாக ஒரு பிச்சைக்காரனை ரோட்டில் பார்த்தால் கூட அவனை வச்சக் கண்ணு வாங்காமல் பார்ப்பாராம். என்றைக்காவது அந்த மாதிரி ஒரு கதாபாத்திரம் அமையும் போது அன்று பார்த்த அந்த பிச்சைக்காரனின் பழக்க வழக்கங்களை தன் கண் முன் வந்து நிறுத்துவாராம். இதை ஒரு பழைய பேட்டியில் சிவாஜியே ஒரு முறை பகிர்ந்திருக்கிறார்.

sivaji2

sivaji2

இதன் காரணமாகத்தான் என்னுடைய நடிப்பு அனைவரையும் ஈர்த்தது என்று சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் ஒரு பத்திரிக்கை ஒன்று சிவாஜியிடம் ‘உங்களுக்கு நீங்கள் நடித்த கதாபாத்திரலேயே மிகவும் பிடித்த கதாபாத்திரம் எது ?’ என்று கேட்க அதற்கு பதிலளித்திருக்கிறார் சிவாஜி.

அப்போது சிவாஜிசொன்ன முதல் கதாபாத்திரம் கப்பலோட்டிய தமிழன் படத்தில் அவர் ஏற்று நடித்த வ.உ.சி.பிள்ளை கதாபாத்திரம்தானாம். மேலும் இந்தப் படத்தை பார்த்த வ.உ.சியின் மகன் சிவாஜியிடம் வந்து என் அப்பாவையே என் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் என்று சொன்னது தான் அவருக்கு மிகப்பெரிய விருதை கொடுத்ததை போல உணர்வை ஏற்படுத்தியதாம்.

sivaji3

sivaji3

அதற்கு அடுத்தப் படியாக சம்பூரண ராமாயணம் படத்தில் அவர் ஏற்று நடித்த பரதன் கதாபாத்திரமாம். அந்தப் படத்தை பார்த்து ராஜாஜியே சிவாஜியை நேரிடையாக பாராட்டினாராம். இதற்கு அடுத்தாற் போல் அப்பர் கதாபாத்திரம் மற்றும் பாசமலர் படத்தில் ஏற்று நடித்த அண்ணன் கதாபாத்திரம். இவைதான் சிவாஜிக்கு மிகவும் கவர்ந்த கதாபாத்திரங்களாம். இதை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : செம மாஸா அறிவிப்பு வெளியாகி நின்றுபோன விஜயகாந்த் படங்கள்!. – வந்திருந்தா வேற லெவல்…

Next Story