Cinema News
கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிச்சதால கேப்டன் பேர் வரல! உண்மையான காரணம் கேட்டா ஆச்சரியப்படுவீங்க
Actor Vijayakanth: தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களுமே இன்று துயரத்தில் ஆழ்ந்து போயிருக்கின்றனர். கேப்டனின் மறைவு யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத மறைவுதான். கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் வெளி நடமாட்டம் இல்லாமல் இருந்தாலும் கேப்டன் இருக்கிறார் என்ற ஒரு தைரியமாவது மக்களிடையே இருந்தது.
ஆனால் இன்று அவர் இல்லை என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காலை முதல் தற்போது வரை ரசிகர்களின் கூட்டத்தால் அவருடைய திருமண மண்டபம் நிரம்பி வழிகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்து பொதுமக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: இப்போ விஜயகாந்த்..? கமல் தப்பினார்.. அடுத்த குறி உங்களுக்கா..? உதயநிதியிடம் பகீர் கிளப்பும் பிரபல இயக்குனர்..!
புரட்சிக் கலைஞர், கேப்டன் என அன்பால் அனைவராலும் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். விஜயகாந்தின் 100 வது படம் கேப்டன் பிரபாகரன். யாருக்கும் இல்லாத பெருமை விஜயகாந்துக்கு இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது.
எம்ஜிஆர் முதல் கமல் வரை யாருக்குமே 100வது படம் வெற்றிப்படமாக அமையவில்லை. ஆனால் விஜயகாந்துக்கு 100வது படம் சூப்பர் ஹிட் வெற்றியடைந்தது. அந்தப் படத்தில் இருந்துதான் அவருக்கு கேப்டன் என்று பெயர் வந்தது என அனைவரும் கூறிக் கொண்டே வந்தார்கள்.
இதையும் படிங்க: விஜயகாந்தின் நிலை திட்டமிட்டு நடந்ததே… அப்போ புரியல.. இப்போ தான் தெரியுது.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்..!
ஆனால் உண்மையிலேயே விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பெயர் அவர் நடித்த செந்தூரப்பூவே படத்தின் மூலம் தான் கிடைத்ததாம். செந்தூரப்பூவே படத்தில் விஜயகாந்தின் கதாபாத்திரத்தின் பெயர் கேப்டன் சௌந்தரபாண்டியனாம்.
அதிலிருந்து அந்தப் படத்தில் விஜயகாந்தை கேப்டன் என்று அழைக்க ஆரம்பித்தார்களாம். கேப்டன் சாப்பிட்டாரா? கேப்டன் கிளம்பிட்டாரா? என்றுதான் கேட்பார்களாம். அதிலிருந்தே அவரதுரசிகர்களும் கேப்டன் என அழைக்க ஆரம்பித்துவிட்டதாக சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் கூறினர்.
இதையும் படிங்க: நீ எதுக்கு பைக்ல வரேனு 3 காரை அனுப்புனாரு – கேப்டன் குறித்து கண்ணீர் மல்க கூறிய இயக்குனர்