விஜயின் மகள் பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா? ஷோபா சொன்ன ஹார்ட் டச்சிங் தகவல்

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தற்போது விஜய் கோட் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் அவருடைய 69 வது படத்தில் இணைய இருக்கிறார். படத்திற்கான மற்ற அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. கோட் படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் இன்னும் சில தினங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து அதனுடைய ஆடியோ லான்ச் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா போன்ற பல முக்கிய நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மீது அதிக அளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபகாலமாக விஜய் அவரின் குடும்பத்தாரை தவிர்த்து வருவதாக தெரிகிறது. அதாவது அவருடைய அரசியல் பிரவேசம் ஆரம்பித்ததில் இருந்து அவர் எப்போதும் சோசியல் மீடியாக்களில் தனியாகவே காணப்படுகிறார்.

இதையும் படிங்க: போட்ட மொத்த ஆல்பமும் ஹிட்! ஆனா ஆளோ அவுட்.. தன்னடக்கத்தால் காணாமல் போன இசையமைப்பாளர்

ஆனால் அதற்கு முன்பு வரை விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா ஆகிய இருவரும் விழாக்கள் செல்வது பொது இடங்களுக்கு செல்வது போன்றவற்றை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் விஜயின் குடும்பம் மற்றும் குழந்தைகள், மனைவி பற்றி எந்த ஒரு அப்டேட்டும் இல்லாத நிலையில் அவருடைய தாய் ஷோபா சமீபத்திய ஒரு பேட்டியில் ஒரு புதிய தகவலை பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே விஜய்க்கு ஒரு தங்கை பிறந்து சிறு வயதிலேயே இறந்து போன செய்தி அனைவருக்கும் தெரியும்.

கிட்டத்தட்ட அவருடைய தங்கையான வித்யாவுக்கு அப்போது மூன்றரை வயதாம். அந்த வயதில் தான் அவர் இறந்து விட்டதாக தாய் ஷோபா கூறினார். அவருடைய ஞாபகமாகத்தான் தன் மகளுக்கு திவ்யா என விஜய் பெயர் வைத்துள்ளதாக ஷோபா கூறியிருக்கிறார். தங்கை வித்யா மகள் திவ்யா ஷாஷா என ஷோபா கூறினார். மேலும் அவர் இறந்த தினமான மே 25ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் விஜய்க்கு ஷோபா குறுஞ்செய்தி அனுப்பி விடுவாராம். இருந்தாலும் விஜய் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது என சொல்லி வருத்தப்படுவார் என்றும் ஷோபா கூறினார்.

இதையும் படிங்க: சகலகலா வல்லவன் பிளாக்பஸ்டர் ஹிட்!.. 100வது நாளில் கமல் செய்த காரியம்!.. நெகிழும் நடிகை…

 

Related Articles

Next Story