ஜெய்சங்கரின் படத்தின் காபி தான் இந்த படமா?.. தயாரிப்பாளருக்கு தொடரும் நெருக்கடி!..

jaisankar
தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்கள் கதை திருட்டுக்கு ஆளாகின்றனர். மேலும் ரீமேக் என்ற பெயரிலும் பல படங்கள் அந்தந்த மொழிகளில் வெளியிடப்படுகின்றன.இதற்கு முன் அனுமதி பெற்றும் நடக்கின்றன சில சமயங்களில் தான் கதை திருட்டு என்ற லிஸ்டில் சேர்க்கப்படுகின்றன.

jaisankar
இந்த நிலையில் ஜெய்சங்கரின் நடிப்பில் வெளிவந்த யாருக்கு மாப்பிள்ளை யாரோ என்ற படத்தின் சில காட்சிகள் இன்றைய காலகட்ட படங்களில் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் இணையத்தில் கூறிவருகின்றனர். அந்த படத்திற்கு கதை வசனம் எழுதியவர் தூயவன்.
இதையும் படிங்க :சக நடிகர்களை இப்படி கேவலப்படுத்துவாரா வடிவேலு?!.. இவ்வளவு சைக்கோத்தனமா?!…
மேலும் இப்படி அந்த படத்தின் காட்சிகளை இப்ப உள்ள படங்களில் சேர்ப்பதால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு வலியை ஏற்படுத்தாதா என்றும் கேள்விகளை கேட்டு வருகின்றனர். மேலும் யாருக்கு மாப்பிளை யாரோ படத்தின் சில காட்சிகள் அர்ஜுன் படமான ஏழுமலை படத்திலும் பிரபுதேவா படமான சார்லின் சாப்ளின் படத்திலும் பயன்படுத்தியிருப்பதாக கூறுகின்றனர்.

arjun
இதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் தூயவன் கதை வசனம் எழுதுவதில் வல்லவர் என்றும் இந்த படம் மட்டும் இல்லை அவர் எழுதிய ஏராளமான படங்களின் காட்சிகள் இப்ப உள்ள படங்களில் காட்டப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.

thooyavan
மேலும் இதே சம்பவம் தொடர்வதால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு கஷ்டத்தை தான் ஏற்படுத்தும் என்றும் இதற்கு சரியன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட வில்லை என்பதை நினைக்கும் போது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார் சித்ராலட்சுமணன்.