Connect with us
jai shankar

Cinema History

ஹீரோவை விட அதிக சம்பளம் வாங்கிய இசையமைப்பாளர்!.. தமிழ் சினிமாவில் இவர் மட்டும்தானாம்!….

பொதுவாக திரையுலகில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் ஹீரோக்கள் மட்டுமே. அதிலும் ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் நடித்தால் படத்தின் பட்ஜெட்டில் 60லிருந்து 70 சதவீதம் அவர்களுக்கே கொடுக்கப்படும். மீதி இருக்கும் பணத்தில்தான் படத்தையே எடுப்பார்கள். அதனால்தான் தமிழ் திரைப்படங்கள் தொழில்நுட்ப ரீதியாக தரமாக உருவாவதில்லை என சொல்லப்படுகிறது.

ஹீரோக்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதியை குறைத்தாலே ஹாலிவுட் ரேஞ்சில் தரமான தொழில்நுட்பம் வாய்ந்த திரைப்படங்கள் இங்கேயும் எடுக்க முடியும். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என சொல்லுமளவுக்குதான் தமிழ் சினிமா இருக்கிறது. அருகிலிருக்கும் கேரளத்திலோ, கர்நாடகாவிலோ, ஆந்திராவிலோ கூட இப்படியெல்லாம் இல்லை. பாகுபலி படத்தில் நடித்ததற்காக பிரபாஸ் வாங்கிய சம்பளம் ரூ.25 கோடி மட்டுமே. மம்முட்டி. மோகன்லால் ஆகியோர் கூட 25 கோடிக்கும் கீழ்தான் சம்பளம் பெறுகிறார்கள்.

இதையும் படிங்க: மார்க்கெட் போகும் என முன்பே கணித்த ஜெய்சங்கர்!. அதற்காக அவர் செய்ததுதான் ஹைலைட்!…

ஆனால், கோலிவுட்டில் விஜய், அஜித், ரஜினி ஆகியோருக்கு குறைந்தபட்ச சம்பளமே ரூ.100 கோடி என ஆகிவிட்டது. விக்ரம் வெற்றிக்கு பின் கமல்ஹாசன் ரூ.150 கோடி வரை கேட்பதாக சொல்லப்படுகிறது. அதோடு, ஒரு படம் ஓடி விட்டாலே பல நடிகர்களும் தடாலென சம்பளத்தை டபுள் மடங்கு ஏத்திவிடுகிறார்கள்.

அதேபோல், ஹீரோக்களுக்கு கொடுப்பதில் 3 அல்லது 4 சதவீத சம்பளம்தான் இசையமைப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த காலத்திலேயே ஹீரோக்களை விட அதிக சம்பளம் பெற்ற இசையமைப்பாளர் பற்றித்தான் பார்க்க போகிறோம். அந்த காலத்தில் டி.ஆர்.பாபா என்கிற இசையமைப்பாளர் இருந்தார். அடிப்படையில் இவர் வயலின் வாசிக்கும் இசை கலைஞர்.

இதையும் படிங்க: உனக்கு எதுக்கு சினிமா?!.. கலாய்த்த சோ.. வைராக்கியத்தோடு சாதித்து காட்டிய ஜெய்சங்கர்…

1952ம் வருடம் மலையாளத்தில் உருவான ‘ஆத்மசாந்தி’ என்கிற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதே தலைப்பில் இப்படம் தமிழிலும் உருவானது. இந்த இரு படங்களையும் இயக்கியவர் ஜோசப் தலியத் எனும் இயக்குனர். இந்த படத்திற்கு ஜோசப் டி.ஆர்.பாப்பாவுக்கு கொடுத்த சம்பளம் ரூ15 ஆயிரம். அப்படத்தில் நடித்த ஹீரோவுக்கு கொடுத்த சம்பளம் ரூ.5 ஆயிரம் மட்டுமே.

tr pappa

இசைக்கலைஞர்களே ஒரு படத்தின் வெற்றிக்கு காரணமாக இருப்பவர்கள். அவர்களுக்குதான் அதிக சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என ஜோசப் சொன்னார். இந்த டி.ஆர் பாப்பா தமிழில் யார் ஜம்புலிங்கம், மறு பிறவி, வைரம், வாயில்லா பூச்சி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த டி.ஆர்.பாப்பாதான் ஜெய்சங்கரை ஜோசப் தலியத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்படித்தான் ஜோசப் இயக்கிய ‘இரவும் பகலும்’ திரைப்படம் மூலம் ஜெய்சங்கர் அறிமுகமானார். இந்த படத்திற்கும் டி.ஆர்.பாப்பாதான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகையுடன் திருமணமா?!.. வார்னிங் கொடுத்த எம்.ஜி.ஆர்!. உடனே செய்து முடித்த ஜெய்சங்கர்!…

google news
Continue Reading

More in Cinema History

To Top