சூப்பர் ஸ்டார் பட்டம் ஈஸியா கிடைச்சிடுமா?.. வெற்றியையே பார்க்காத விஜய்!.. பிரபல நடிகர் ஓபன் டாக்..
சூப்பர் ஸ்டார் ரஜினி மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டு சினிமாவையே ஆண்டுக்கொண்டிருப்பவர். இவர் ஒரு சாம்ராஜ்ஜியம் என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் கோலோச்சி வருகிறார். அண்டை மா நிலத்தில் இருந்து வந்தவர் ஆனாலும் தமிழக மக்களின் நெஞ்சங்களில் கடவுள் போல குடிபெயர்ந்துள்ளார்.
தலைவரே , சூப்பர் ஸ்டாரே என்று மக்களின் ஆக்ரோஷமான குரலுக்கு சொந்தக்காரராக கிட்டத்தட்ட 30 வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறார். இப்பேற்பட்ட பெருமைக்குரிய ரஜினிகாந்திற்கு இணையாக அடுத்த சூப்பர் ஸ்டார் அல்லது இப்பொழுது இவர்தான் சூப்பர் ஸ்டார் என விஜயை கூறிவருகிறார்கள்.
இதையும் படிங்க : அஜித்தை அனைவரின் முன்னும் அவமானப்படுத்திய பிரபல நடிகையின் தாய்… இதெல்லாம் நியாயமா??
ரஜினிக்கு அடுத்தப்படியாக அதிக ரசிகர்களை கொண்டவராக விஜய் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கே உரித்தானது என்பதை மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர். அதனாலேயே விஜயை சூப்பர் ஸ்டார் என்று சொல்வதை யாராலும் ஈஸியாக ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை. மேலும் இதை பற்றி பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரெங்கநாதன் அவருடைய கருத்தை முன்வைத்திருக்கிறார்.
அவர் கூறும்போது ரஜினி கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறார். மேலும் ரஜினிகாந்த் முற்றிலும் பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட படத்திலேயே நடித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
ரஜிக்கு அடுத்தப்படியாக வளர்ந்து வரும் நடிகர்களில் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் விஜய் ரஜினியின் இடத்தை தொட்டாரா என்றால் இல்லை. ஏனெனில் ரஜினியின் படங்கள் அப்பொழுது இருந்தே பல பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால் விஜய் எந்த ஒரு பெரிய நடிகர் படங்களுடன் மோதி வெற்றி பெற்றார் என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை.
அதுமட்டுமில்லாமல் சோலோவாக ரஜினியின் படம் இன்றும் ஜப்பானில் வெளியாகி வெற்றிப்பெற்று வருகிறது. அந்த பெருமையை இதுவரை யாராலும் எட்ட முடியவில்லை. ஆகவே விஜய் தான் நம்பர் ஒன் என்று சொல்வது சாத்தியமில்லை. மேலும் ரஜினியின் இடத்தை விஜய் பிடிக்க நாளாகும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று பயில்வான் தெரிவித்தார்.