நயன் பிறந்தநாளுக்கு வி்க்கி பரிசாக கொடுத்த கார் இத்தனை கோடியா?.. செம லவ்வு போல!…

Published on: November 30, 2023
nayanthara
---Advertisement---

nayanthara: திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா. நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது விக்கியுடன் நயனுக்கு காதல் ஏற்பட்டது. அதன்பின் சில வருடங்கள் இருவரும் காதலர்களாக வலம் வந்தனர். விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா பரிசு கொடுப்பது, நயனின் பிறந்தநாளன்று உருகி உருகி அவருக்கு விக்கி வாழ்த்து சொல்வது என இருவரும் காதலில் திளைத்து வந்தனர்.

அதோடு, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வந்தார். கடந்த வருடம் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். மேலும், வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கும் பெற்றோராக மாறினர்.

இதையும் படிங்க: அந்த நடிகையுடன் ஜோடி போட ஆசைப்பட்டு ஏமாந்துபோன ரஜினி!.. வடை போச்சே!..

நயன் அவ்வப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிடுவார். ஒருபக்கம் இருவரும் சேர்ந்து புதிய திரைப்படங்களை தயாரிப்பது, உருவான திரைப்படங்களை வாங்கி வெளியிடுவது என சினிமா தொடர்பான வேலைகளையும் செய்து வருகிறார்கள். அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு பறிபோன நிலையில், அடுத்து லவ்டுடே பிரதீப்பை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டிருக்கிறார்.

திருமணத்திற்கு பின்னரும் நயன்தாரா சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை அவர் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. ஷாருக்கானுடன் இணைந்து அவர் நடித்த ஜவான் படமும் ஆயிரம் கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.

இதையும் படிங்க: இத செய்ற வரைக்கும் சும்மா விட மாட்டோம்! ஞானவேல் ராஜாவுக்கு சமுத்திரக்கனி கொடுத்த கடைசி வார்னிங்

இந்நிலையில், நயன்தாரா கடந்த 18ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதைத்தொடர்ந்து அவருக்கு அவரின் கணவர் விக்னேஷ் சிவன் விலை உயர்ந்த மெர்சிடிஸ் மேபேக் கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் நயன்தாரா தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு விக்கிக்கு நன்றி கூறியுள்ளார். அந்த காரில் விலை 2.60 கோடியிலிருந்து 3.40 கோடி வரை இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

car

இதையும் படிங்க: மருத்துவமனையில் விஜயகாந்த்.. முதல் ஆளாக களத்தில் இறங்கிய பார்த்திபன்… என்ன செய்தார் தெரியுமா?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.