விஜய் அரசியல் பேசாமல் இருக்க இதுதான் காரணம்! பயமுறுத்திட்டாங்க.. தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்…

by Rajkumar |   ( Updated:2023-06-03 22:10:17  )
vijay
X

vijay

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விஜய், அதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

அவர் நடித்த பூவே உனக்காக திரைப்படம் அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக இருந்தது. அதனை தொடர்ந்து காதல் திரைப்படங்களாக நடிக்க துவங்கினார். அதன் பிறகு திருமலையில் இருந்து ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார்.

அதிலிருந்து இப்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு ஆக்ஷன் கதாநாயகனாகவே வலம் வந்து கொண்டுள்ளார் விஜய். தற்சமயம் லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

vijay

vijay

அடுத்ததாக விஜய் அரசியலுக்கு வர இருப்பதே அவர் வெங்கட் பிரபு படத்தில் நடித்த காரணம் என கூறப்படுகிறது. ஏனெனில் வெங்கட் பிரபு இதற்கு முன்பு இயக்கிய மாநாடு திரைப்படம், அரசியல் களத்தை பின்புறமாக கொண்டிருந்தது. எனவே இந்த படமும் அப்படியான ஒரு படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுதான் காரணம்:

ஆனால் விஜய் படங்களிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி அதிகமாக அரசியல் குறித்து பேசுவது கிடையாது, சில படங்களில் குறைவாக பேசியுள்ளார். பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் இதுக்குறித்து பேசும் போது மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி குறித்து விஜய் ஒரு வார்த்தை பேசி இருப்பார்.

அதற்காகவே அவரது வீட்டிற்கு வருமான வரி சோதனை நடத்தினர் எனவே விஜய் அரசியல் குறித்து பேசும் பொழுது கடுமையாக தாக்கப்படுகிறார்கள். அதனாலயே அவர் மத்திய அரசு குறித்து அதிகமாக அரசியல் பேசுவது கிடையாது என கூறியிருந்தார் ராஜன்.

இதையும் படிங்க: ஐயோ பாவம்!. எந்த படத்தலயும் நடிக்க முடியாது!. வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சிவகார்த்திகேயன்..

Next Story