எங்கிட்ட சினிமா பத்தி மட்டும் பேசுங்க… அஜீத் அப்பவே போட்ட ஸ்ட்ரிக்ட்டான கண்டிஷன்!

goodbadugly
Goodbadugly: அஜீத் சினிமாவைத் தவிர்த்து கார், பைக் ரேஸ்னு ஆர்வம் காட்டி வருகிறார். சினிமாவில் அவ்வப்போது ரசிகர்களைக் கவரும் வகையில் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவருக்கு மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இந்தப் படம் வெளியாகும் சமயத்தில் இயக்குனரே இது வழக்கமான அஜீத் படமாக இருக்காது என்று சொல்லி விட்டார்.
அதைப் போலவே படமும் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை. பக்கா கமர்ஷியலான படங்களின் வரிசையில் அது இடம்பெறவில்லை. அது ஒரு ஆர்ட் பிலிம் மாதிரி இருந்தது. அதனால் ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் பக்காவான கமர்ஷியல் படத்தில் நடிக்க அஜீத் முடிவு செய்தார். அதுதான் குட் பேட் அக்லி.
மார்க் அண்டனியை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜீத்தை அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் காட்சிக்குக் காட்சி செதுக்கி இருக்கிறார். அஜீத்தைப் பல கெட்டப்புகளில் காட்டி மிரட்டியுள்ளார். டிரெய்லரைப் பார்த்ததுமே ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து விட்டனர்.
வரும் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. அந்த வகையில் இப்போது இருந்தே படத்திற்குக் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் அஜீத் குறித்து ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.
எனக்குன்னு ஒரு பர்சனல் லைஃப், புரொபசனல் லைஃப், ஃபேஷன் இருக்கு. என் வாழ்க்கையில தேவையில்லாம கமெண்ட் பண்ணாதீங்க. நீங்க என்கிட்ட சினிமா பற்றிதான் பேசணும் என்று அஜீத் சார் எப்பயோ சொல்லிட்டாரு. அதே மாதிரி படம் பார்த்தீங்களா அதுக்கப்புறம் உங்க வேலையைப் பாருங்க. உங்க பிசினஸைப் பாருங்க.
அதை விட்டுட்டு என்னோட ஃபேஷன்ல நீங்க கமெண்ட் பண்ணக்கூடாது என்று அவர் முதல்ல இருந்தே இன்டர்வியூல சொல்லுவாரு. அவர்கிட்ட உங்க படம் நிறைய வரணும். அதுக்காக ரிஸ்க் எடுக்காதீங்க என்று அவர் ஃபேஷன் குறித்து பேசலாமே தவிர, வேற உரிமையே நமக்குக் கிடையாது என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.