விஜய்க்கு வச்ச சூனியம்! எஸ்.ஏ.சியுடனான பிரச்சினைக்கு இதுதான் காரணமா.. உண்மையை போட்டுடைத்த பிரபலம்
Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ரஜினியையே மிஞ்சும் அளவுக்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார் விஜய். பல விமர்சனங்களை கடந்து இன்று தமிழ் நாட்டின் வசூல் சக்கரவர்த்தியாக உயர்ந்திருக்கிறார் என்றால் விஜயின் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும்தான் காரணம். ஆனால் அவரை இந்தளவுக்கு ஒரு நடிகராக உயர்த்தியதற்கு அவரது தந்தை எஸ்.ஏ.சியும் காரணம்.
விஜயின் சினிமா வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்தவர் அவரது தந்தைதான். ஆனால் இன்று அந்த விஜயை இன்னொரு நபர் இயக்குகிறார் என்றால் எந்த அப்பாவுக்குத்தான் கோபம் வராமல் இருக்கும்? அதுதான் புஸ்ஸீ ஆனந்த் மீது எஸ்.ஏ.சிக்கு இருக்கும் கோபம். இதை பற்றி வலைபேச்சு அந்தனன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது புஸ்ஸீ ஆனந்த்னால்தான் விஜயின் வாழ்க்கையே வீணாப் போகிறது. விஜயை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கிறது என்று எஸ்.ஏ.சி சொன்னதாக நிருபர் ஒருவர் வலைப்பேச்சு அந்தனனிடம் கேட்டார்.
இதையும் படிங்க: 200 நாட்கள் ஓடிய கேப்டன் விஜயகாந்த் படங்கள்… ஒரே ஆண்டில் 4 வெற்றிப்படங்கள்!..
அதற்கு பதிலளித்த அந்தனன் விஜய் ஒரு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாரா என்ற சந்தேகம் எஸ்.ஏ.சிக்கு இருப்பதாக கூறினார். எஸ்.ஏ.சி பார்த்துக் கொண்டுவரப்பட்டவர்தான் புஸ்ஸீ ஆனந்த். இவர் வந்த பிறகுதான் தனக்கும் விஜய்க்கு உண்டான அந்த உறவை பிரித்தார் என எஸ்.ஏ.சி நம்புவதாக அந்தனன் கூறினார். மேலும் புஸ்ஸீ ஆனந்தின் நடவடிக்கையிலும் எஸ்.ஏ.சிக்கு திருப்தி இல்லை.
ஆனால் சினிமா துறையில் எஸ்.ஏ.சி சொன்னது என்னவெனில் விஜய்க்கு புஸ்ஸீ ஆனந்த் கேரளா மாந்திரீக ரீதியாக ஏதோ சூனியம் வைத்துவிட்டதாக பேசிக் கொண்டிருக்கிறாராம். அதனால்தான் என்னிடம் விஜய் நெருங்கவே இல்லை என்று எஸ்.ஏ.சி சொல்லிக் கொண்டிருப்பதாக அந்தனன் கூறினார். ஆனால் இதையெல்லாம் தாண்டி அவர்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சினையே தோளுக்கு மேல் வளர்ந்த பையன் தோழன். ஆனால் எஸ்.ஏ.சி விஜயை அடிமையாகத்தான் நடத்தினார் என அந்தனன் கூறினார்.
இதையும் படிங்க: பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!
ஆரம்பத்தில் இருந்தே எஸ்.ஏ.சி சொல்படித்தான் விஜய் கேட்க வேண்டும். செட்டிற்கு போனால் கூட விஜய் அருகில் எந்தவொரு நாற்காலியும் போட அனுமதிக்கமாட்டாராம் எஸ்.ஏ.சி. ஏனெனில் அதில் வேறொரு நடிகர் வந்து உட்கார்ந்து விஜயின் கவனத்தை திசை திருப்பி விடுவார் என்ற பயத்தில் எஸ்.ஏ.சி அப்படி செய்வாராம். ஒரு கட்டத்தில் சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்ததும் இதையெல்லாம் விஜய் வெறுக்க ஆரம்பித்தார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எஸ்.ஏ.சியிடம் இருந்து விலக ஆரம்பித்தார்.
ஒரு பொதுவெளியில் மகன் என்று கூட பார்க்காமல் விஜயை பற்றி தேவையில்லாத கருத்துக்களை எஸ்.ஏ.சி சொல்ல ஆரம்பித்ததும் அவரிடம் இருந்து சுத்தமாக விலகினார் விஜய் என அந்தனன் கூறினார்.
இதையும் படிங்க: அந்த நடிகரா? செட் ஆகாது.. அஜித் நடிக்க மறுத்து அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம்