எங்க காதலுக்கு எதிர்ப்பா? எப்படி திருமணம் நடந்துச்சு தெரியுமா? செல்வமணி சொன்ன ப்ளாஷ்பேக்
தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகளை நாம் பார்த்து வருகிறோம். அதுவும் 80, 90களில் கரம்பிடித்த பிரபலங்கள் இன்றுவரை தங்கள் குடும்ப வாழ்க்கையை நல்ல படியாக நடத்தி வருகின்றனர். ஆனால் இப்போதைய இளம் தலைமுறை நடிகர்கள் ஒரு சிறு கருத்து வேறுபாடு இருந்தாலும் உடனே விவாகரத்து வரை சென்று நீதிமன்ற வாசலில் நிற்பதை பார்க்க முடிகின்றது.
அந்த வகையில் பிரபல இயக்குனர் செல்வமணி அவருடைய திருமண வாழ்க்கை குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட செல்வமணிக்கு எதிராக ரோஜாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக பல செய்திகள் வெளியாகின. ஆனால் உண்மையிலேயே இவர்கள் திருமணத்திற்கு எந்தவித எதிர்ப்பும் கிளம்ப வில்லை என்பதுதான் உண்மை.
இதை பற்றி செல்வமணி கூறியதாவது முதன் முதலில் ரோஜாவை பார்த்த போதே செல்வமணிக்கு பிடித்துவிட்டதாம். கருப்பு நிறமாக இருந்தாலும் ஏதோ ஒன்று செல்வமணியை ஈர்த்திருக்கிறது. அதனால் ரோஜாவை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை ரோஜாவிடம் முதலில் சொல்லாமல் நேராக ரோஜாவின் பெற்றோரிடம் அதாவது ரோஜாவின் அப்பாவிடம் போய் சொல்லியிருக்கிறார்.
ஏற்கனவே ரோஜாவின் அப்பா செல்வமணியின் மிக தீவிரமான ரசிகராம். செல்வமணியின் படங்களினால் ஈர்க்கப்பட்டவராம். அதனால் உங்கள் மகளை எனக்கு பிடித்திருக்கிறது. அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என செல்வமணி ரோஜாவின் அப்பாவிடம் கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் ரோஜாவின் ஒரு அண்ணன் எம்.பி.பி.எஸ் மற்றும் இன்னொரு அண்ணன் எம். காம் படித்துக் கொண்டிருந்தார்களாம்.
அதனால் ரோஜாவின் அப்பா ‘ரோஜாவின் அண்ணன்களிடம் கேட்டு சொல்கிறேன்’ என கூற அதன் பிறகு அனைவர் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடந்திருக்கிறது. இதற்கிடையில் சாதியை வைத்து இவர்கள் திருமணத்திற்கு எந்த பிரச்சினையும் வரவில்லை என செல்வமணி கூறியதில் இருந்தே தெரிகிறது.