“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பின் அத்திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இப்போது “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக செய்திகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. மேலும் இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி, “தளபதி 68” திரைப்படம் வெங்கட் பிரபுவின் கைகளுக்கு வந்ததற்கு சிவகார்த்திகேயன் எந்தளவுக்கு காரணமாக இருந்தார் என்பது குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“மாநாடு” திரைப்படம் வெளிவந்தபோதே ஏஜிஎஸ் நிறுவனத்தார் வெங்கட் பிரபுவை அணுகி தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக ஒரு திரைப்படத்தை இயக்கித்தருமாறு ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக கொடுத்திருந்தார்களாம். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து சிவகார்த்திகேயனையும் அணுகி அவரிடம் ஒப்புதல் வாங்கி அவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக கொடுத்திருக்கின்றனர் ஏஜிஎஸ் நிறுவனத்தினர்.

ஆனால் அந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் மற்ற திரைப்படங்களில் மிக பிசியாக இருந்தாராம். மேலும் இன்னும் ஒன்றரை வருடங்கள் காத்திருக்கும்படியும் கூறியிருக்கிறார். சிவகார்த்திகேயன் வரும் வரை வெங்கட் பிரபுவை காக்கவைக்க முடியாது என்று நினைத்த ஏஜிஎஸ் நிறுவனம், வெங்கட் பிரபுவிடம், “விஜய்க்கு ஒரு கதை உருவாக்க முடியுமா?” என கேட்டிருக்கின்றனர்.

அதன்படி வெங்கட் பிரபுவும் விஜய்க்காக ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார். அதன் பின் அந்த கதையை விஜய்யிடமும் கூறினாராம். விஜய்க்கு அந்த கதை மிகவும் பிடித்துவிட்டதாம். இவ்வாறு சிவகார்த்திகேயனின் தாமதத்தால் வெங்கட் பிரபுவுக்கு “தளபதி 68” புராஜெக்ட் கிடைத்துள்ளதாக பிஸ்மி அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவையே மிரள வைத்த வடிவுக்கரசி!.. அவங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?..
