அண்ணனுக்காக உயிரயே கொடுக்கும் தம்பி! விஜய் – அட்லீ பின்னி பிணைய இதுதான் காரணமா?

Published on: November 16, 2023
vijay
---Advertisement---

Atlee Bonding with Vijay: தமிழ் திரையுலகில் தற்போது மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லீ. ராஜாராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அட்லீ தொடர்ந்து விஜயை வைத்து 3 ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்து மாஸ் காட்டினார்.

அதிலிருந்தே விஜய்க்கு ஏற்ற இயக்குனர் என்றால் அது அட்லீதான் என்று அடையாளப்படுத்தப்பட்டார். அதற்கேற்ற வகையில் பல மேடைகளில் அட்லீ பேசும் போதும் கூட என் அண்ணனுக்காக இன்னும் என்னவேண்டுமானாலும் செய்வேன் என்று விஜயை தூக்கி வைத்தும் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: கதை பிடித்திருந்தும் நடிக்காத ரஜினி!. கேப்பில் புகுந்த வேற இயக்குனர்.. கவுதம் மேனனோட பேட் லக்!..

அதே போல் விஜயும் தம்பி அட்லீ இருக்கும் போது என்ன கவலை என்பது மாதிரி தம்பி ,தம்பி என்றுதான் அட்லீயை அழைப்பார். சில சமயம் இது நெட்டிசன்களுக்கு மீம்ஸ்கள் கிரியேட் செய்ய வசதியாகவும் இருந்தது. மேலும் விஜய் நடிப்பில் வெளியான சமீப கால படங்களான பீஸ்ட், வாரிசு, லியோ போன்ற படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறாத நிலையில் தம்பி அட்லீயாலதான் விஜயை மாஸா காட்ட முடியும் என்றெல்லாம் இணைய வாசிகள் தொடர்ந்து கிண்டலடித்து வந்தனர்.

இந்த நிலையில் அட்லீ ஒரு பேட்டியில் சார் – ஆக இருந்த விஜய் எப்படி எனக்கு அண்ணனாக மாறினார் என்பதை பற்றி கூறியுள்ளார். அட்லீ இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக இருந்தவர் என அனைவருக்கும் தெரியும். விஜய் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘ நண்பன்’. இந்த படத்தில் அசோசியேட்டராக பணிபுரிந்தவர் அட்லீ.

இதையும் படிங்க: படம் ப்ளாப் எனத் தெரிந்தும் இத்தனை படங்களில் நடித்த கார்த்தி..! ஆனா அதுக்கு அவர் சொல்லும் காரணம் இருக்கே?

நண்பன் பட கடைசி படப்பிடிப்பின் போது விஜய் அட்லீயை கேரவனுக்கு வரச் சொன்னாராம். அட்லீயும் அங்கு போக ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னாராம் விஜய். அதன்பிறகு ‘ நீ வேலை செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உன்னுடைய கேப்டனுக்கு படமுழுக்க நீ கொடுக்கிற ஒத்துழைப்பு என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அதனால் ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து கொண்டு வா. சேர்ந்து நாம் படம் பண்ணலாம்’ என்று விஜய் அட்லீயிடம் கூறியிருக்கிறார்.

விஜய் தவிற வேறெந்த நடிகரும் இந்த மாதிரி என்னிடம் சொன்னதில்லை என்றும் அதுவரை விஜயை நான் சார் என்றுதான் அழைத்தேன். ஆனால் விஜய் இந்த மாதிரி சொன்னதிலிருந்து அவரை அண்ணன் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டேன் என்று அந்த பேட்டியில் அட்லீ கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: எல்லார் வாழ்க்கையில் மொத்தமாக பிரச்னையை பத்த வச்சாச்சு போல.. சிறகடிக்க ஆசை ஷாக்..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.