விஜய்-விஷால் சந்திப்பு பின்னனியில் இவ்ளோ விஷயம் இருக்கா?.. கோடம்பாக்கத்தையே பொறாமை பட வைத்த தளபதிகள்..
நேற்று நடிகர் விஷால் திடீரென விஜயை நேரில் சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடம்பாக்கமே ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். விஜயும் விஷாலும் நேரில் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இவர்கள் சந்திப்பின் பின்னனி காரணம் நடிகர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டீஸரை விஜய் வெளியிடுவதால்தான் என்றாலும் இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் அல்லது எந்த படத்திற்கும் இப்படி ஒரு முக்கியத்துவத்தை கொடுக்காத விஜய் ஏன் விஷாலுக்கு மட்டும் கொடுத்தார் என்ற கேள்வி கோடம்பாக்கம் முழுவதும் எழும்பி வருகிறது.
அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் படத்தின் புரோமோஷனுக்கு கூட விஜயை அழைத்தாலும் வரமாட்டாராம். அவர் படம் குறித்த விழாக்களுக்கோ அல்லது புரோமோஷனுக்கோ மட்டும் தான் விஜய் முக்கியத்துவம் கொடுப்பார். அப்படி இருந்த விஜய் தீடீரென விஷாலுக்காக இந்த செயலை செய்தது ஏன் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அதற்கு சில காரணங்களை மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். அடிப்படையில் விஷால் விஜயின் தீவிர ரசிகர். விஜயின் மீதுள்ள பற்று காரணமாகத்தான் தன் பெயருக்கு முன்னால் புரட்சித்தளபதி என்ற அடைமொழியை கொடுத்துக் கொண்டாராம்.ஏற்கெனவே விஜயை இளைய தளபதி என்று அழைக்க விஷாலை புரட்சித்தளபதி என அழைக்கத்தொடங்கினார்கள்.
இது தெரிந்தே விஷால் மீது விஜய்க்கும் ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டதாம். விஷால் நடித்த அவன் இவன் படத்தை விஜய் பார்த்து தன் வீட்டிற்கே அழைத்து எப்படி அந்த மாதிரி கண்ணை வைத்து நடித்தீர்கள்? பாலா எப்படி நடந்து கொண்டார்? நீங்கள் எப்படி நடித்தீர்கள்?என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டாராம் விஜய். அதிலிருந்தே விஜய் மீது இன்னும் அளவுக்கதிகமான பாசம் கொண்டவராக மாறினாராம் விஷால்.
அதன் காரணமாகத்தான் லியோ படத்தில் கூட அர்ஜூன் கதாபாத்திரத்தில் முதலில் விஷால் தான் நடிக்க இருந்தது. ஆனால் அது ஏதோ சில பல காரணங்களால் முடியாமல் போனது. மேலும் நேற்றைய சந்திப்பில் விஷால் ஒரு ரசீதை நீட்டினாராம். அது விஜயின்
பெயரில் சொந்த செலவிலேயே அன்னை தெரசா இல்லத்திற்கு விஷால் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாராம். அதற்கான ரசீது தானாம்.
இதையும் படிங்க : காணாமல் போன அருள்மொழிவர்மன்!… சோழ ராஜ்ஜியத்தின் நிலை என்ன? – பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்…
அதை கேட்டதும் விஜய்க்கு பெரும் மகிழ்ச்சியாம். மேலும் தன்னிடம் இரண்டு கதைகள் இருக்கிறது , கண்டிப்பாக நீங்கள் நடிக்க வேண்டும் என விஜயிடம் கேட்டிருக்கிறாராம் விஷால். விஜயும் பண்ணலாம் நண்பா என்று சொல்லியிருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் ஏற்கெனவே அரசியல் பார்வை கொண்டவர் விஷால். அதனால் விஜயிடம் நீங்கள் அரசியலுக்கு வந்தால் என் முழு ஆதரவு உங்களுக்கு கண்டிப்பாக இருக்கும் என்றும் ஒரு அணில் போல சேவை செய்வேன் என்றும் கூறியிருக்கிறாராம் விஷால்.