விக்னேஷ் சிவன் சொல்றதெல்லாம் கம்பி கட்டுற கதையால இருக்கு! அஜித் 62 படத்தில் இருந்து விலகிய காரணம் என்ன தெரியுமா??
“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அத்திரைப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது.
ஆனால் சில நாட்களிலேயே விஷ்ணு வர்தன் இயக்கவுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி என்றும் “ஏகே 62” திரைப்படத்தை மகிழ் திருமேனிதான் இயக்கவுள்ளார் எனவும் செய்திகள் தெரிவித்தன.
விக்னேஷ் சிவன் கூறிய கதை மிகவும் சுமாராக இருந்ததாகவும், பல நாட்கள் அவகாசம் இருந்தும் அவர் சுமாரான கதையைத்தான் உருவாக்கி வைத்திருந்தார் என்ற காரணத்தினாலும்தான் விக்னேஷ் சிவனை லைக்கா நிறுவனம் மாற்றியது என்று ஒரு தகவல் வெளிவந்தது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் “ஏகே 62” திரைப்படத்தை இயக்காதது குறித்து ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். அதாவது விக்னேஷ் சிவன் ஒரு பிரம்மாண்டமான கதையை அஜித்திற்காக தயார் செய்து வைத்திருந்தாராம்.
“ஏகே 62” திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட, இவ்வளவு குறுகிய காலத்தில் அத்திரைப்படத்தை உருவாக்க முடியாது என விக்னேஷ் சிவன் நினைத்தாராம். ஆதலால்தான் ‘ஏகே 62” திரைப்படத்தில் இருந்து விலகி, “ஏகே 63” திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளாராம்.
இதையும் படிங்க: குஷ்புவை பற்றிச் சொன்னது தவறான தகவலா? மூத்த பத்திரிக்கையாளர் விளக்கம்… இப்படி அவசரப்பட்டுட்டீங்களேப்பா!!
“ஆனால் இந்த தகவல் கம்பிக்கட்டுகிற கதை போல் உள்ளது. விக்னேஷ் சிவன் ஏகே 62 திரைப்படத்திற்காக மொட்டை ராஜேந்திரன், சந்தானம் ஆகியோரை புக் செய்திருந்தார். அதுவும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று வேறு கூறியிருந்தார். இதை வைத்து பார்க்கும்போது விக்னேஷ் சிவன் தனது பி ஆர் ஓவை வைத்து இப்படி ஒரு கட்டுக்கதையை பரப்பிவிடுகிறார் என்றுதான் நினைக்கிறேன்” என பிஸ்மி அந்த வீடியோவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.