அட்லீக்காகலாம் வெயிட் பண்ண முடியாது- விஜய் எடுத்த அதிரடி முடிவு… இதுதான் காரணமா?

by Arun Prasad |   ( Updated:2023-05-17 10:13:34  )
Vijay-Atlee
X

Vijay-Atlee

“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 68 ஆவது திரைப்படத்தில் அட்லீயுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அட்லீ இயக்கி வரும் “ஜவான்” திரைப்படத்தின் வெளியீடு ஜூன் மாதத்தில் இருந்து தற்போது செப்டம்பர் மாதம் வரை தள்ளிப்போயுள்ளது.

இதனை தொடர்ந்து விஜய், தெலுங்கு இயக்குனரான கோபிசந்த் மல்லினேனியுடன் கைக்கோர்க்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும் அத்திரைப்படத்தை ஆர்.பி.சௌத்ரி தனது 100 ஆவது திரைப்படமாக தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

Vijay-Atlee

Vijay-Atlee

ஆனால் சில காரணங்களால் சௌத்ரியால் அத்திரைப்படத்தை தயாரிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால் தற்போது “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. மேலும் இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் இதற்கு முன்பு விஜய்யை வைத்து “பிகில்” திரைப்படத்தை தயாரித்திருந்தது. அத்திரைப்படம் அவர்களுக்கு நல்ல வெற்றியை தந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் விஜய் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது “தளபதி 68” திரைப்படத்தை அட்லீ தவறவிட்டதற்கான காரணம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் “ஜவான்” திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்ததை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இத்திரைப்படம் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளதையும் அறிவோம்.

முதலில் அட்லீ, ஜூன் மாதத்திற்குள் “ஜவான்” திரைப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு வந்தவுடன் “தளபதி 68” படத்திற்கான பணிகளை தொடரலாம் என விஜய் நினைத்தாராம். ஆனால் “ஜவான்” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ள நிலையில், இந்த இடைப்பட்ட காலகத்தில் அட்லீக்காக வெறுமனே காத்திருக்க முடியாது என விஜய் முடிவு செய்தாராம். ஆதலால்தான் விஜய் வெவ்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்க தொடங்கிவிட்டாராம். இதன் காரணமாகத்தான் விஜய்-அட்லீ கூட்டணி “தளபதி 68” படத்திற்காக கைக்கோர்க்கவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நாடகத்தில் எம்.ஜி.ஆரை கலாய்த்த சிறுவன்!… அதிர்ச்சியடைந்த நாடக குழு… பதிலுக்கு எம்.ஜி.ஆர் என்ன செஞ்சார் தெரியுமா?

Next Story