கவுண்டமணிக்கும் கமலுக்கும் இடையே வெடித்த அணுகுண்டு… விரிசலுக்கு காரணம் என்ன தெரியுமா??
தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து வரும் கவுண்டமணி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிம்பு என பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
குறிப்பாக கமல்ஹாசனுடன் இணைந்து “16 வயதினிலே”, “ஜப்பானில் கல்யாணராமன்”, “பேர் சொல்லும் பிள்ளை”, “சிங்கார வேலன்”, “மகராசன்”, “இந்தியன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக “16 வயதினிலே”, “ஜப்பானில் கல்யாணராமன்” போன்ற திரைப்படங்களில் கவுண்டமணி நடித்திருந்தாலும், அதில் கமல்ஹாசனுடன் அவர் இடம்பெற்ற காட்சிகள் மிகவும் குறைவே.
“இந்தியன்” திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசனுடன் கவுண்டமணி இணைந்து நடிக்கவே இல்லை. இந்த நிலையில் கவுண்டமணி, கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்காததற்கான காரணம் குறித்து பிரபல சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.
“கவுண்டமணி கமல்ஹாசனை விட மூத்த நடிகர். கமல்ஹாசன் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். கவுண்டமணி தொடக்கத்தில் 5000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். ஆதலால் இருவரின் அனுபவமும் சமநிலையில் தான் இருக்கிறது.
அப்படிப்பட்ட சூழலில், திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடிக்கும்போது கமல்ஹாசனை வாப்பா போப்பா என ஒருமையில் அழைப்பார். கவுண்டமணி. எப்போதும் கமல்ஹாசனுக்கு தன்னை மற்றவர் ஒருமையில் அழைப்பது பிடிக்காது.
இதே போல்தான் ஒய்.ஜி.மகேந்திரனும் கமல்ஹாசனை படப்பிடிப்பில் ‘வாடா போடா’ என்பார். அதன் பிறகு ஒய்.ஜி.மகேந்திரனை தனது திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்வதை கமல்ஹாசன் விரும்பவில்லை. மற்றவர்கள் எப்போதும் ‘கமல் சார்’ என்று அழைப்பதைத்தான் அவர் விரும்புவார். இதில் தவறு எதுவும் இல்லை. அவர் ஒரு அறிவுஜீவிதான்.
ஆதலால்தான் கவுண்டமணி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோருடன் ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் இணைந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்” என்று அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் “கமல்ஹாசன் தன்னுடன் இணைந்து நடிக்கவில்லையே என கவுண்டமணி வருத்தப்பட்டதே இல்லை. ஒரு நாள் நடிப்பதற்கு ஒரு லட்சம் சம்பளமாக கேட்டவர் கவுண்டமணி. கவுண்டமணிக்கு கமல்ஹாசனை விட சம்பளம் அதிகம். மேலும் அவர் மிகவும் பிசியாக இருந்தார். ஆதலால் அவர் இதனை குறித்து கவலைப்படவில்லை” எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.