நயன்தாரா கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்காததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா?? இது தெரியாம போச்சே!!

by Arun Prasad |
Nayanthara and Kamal Haasan
X

Nayanthara and Kamal Haasan

நயன்தாரா தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் சமீப காலமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகருடன் பல திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் நயன்தாரா.

Nayanthara

Nayanthara

தற்போது அட்லி பாலிவுட்டில் இயக்கி வரும் “ஜவான்” திரைப்படத்தில் ஷாருக் கானுடன் நடித்து வருகிறார் நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், சிம்பு, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் நயன்தாரா நடித்திருந்தாலும் இதுவரை கமல்ஹாசனுடன் ஒரு திரைப்படத்தில் கூட நடித்ததில்லை.

நயன்தாரா கமல்ஹாசனுடன் ஒரு திரைப்படத்திலாவது நடிப்பார் என ரசிகர்கள் ஆவலோடுதான் காத்திருக்கின்றனர்.ஆனால் அதற்கான எந்த வித முகாந்திரமும் தற்போது வரை இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், நயன்தாரா கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து நடிக்காதது குறித்து ஒரு வீடியோவில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: கங்கை அமரனை இசையமைக்கச் சொன்னதால் கடுப்பில் முகத்தை திருப்பிக்கொண்ட இளையராஜா… சொந்த தம்பின்னு பாக்காம….

Nayanthara and Kamal Haasan

Nayanthara and Kamal Haasan

“கமல்ஹாசனும் நயன்தாராவும் சேர்ந்து நடிக்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இப்போது கமல்ஹாசன் நடித்துக்கொண்டிருக்கின்ற படங்களில் கதையமைப்பும் ஒரு காரணமாக இருக்கிறது. அதில் நயன்தாராவுக்கு பொருத்தமான பாத்திரங்கள் இருக்க வேண்டும் அல்லாவா? நயன்தாராவுக்கு வேலை வைக்கும் கதாப்பாத்திரமாக இருந்தால்தானே நயன்தாராவை அதில் நடிக்க வைக்கமுடியும்” என அந்த வீடியோவில் சித்ரா லட்சுமணன் கூறியிருந்தார்.

Next Story