kamal
Thug Life: கமல் மணிரத்தினம் கூட்டணியில் வெளியாக கூடிய திரைப்படம் தக் லைஃப். நாயகன் படத்திற்கு பிறகு கமலும் மணிரத்தினமும் இந்த படத்தின் மூலம்தான் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள்.கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கும் பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைய இருக்கிறார்கள்.
இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க இருக்கிறார்கள். கமலுடன் இணைந்து த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் போன்ற பல நடிகர்கள் நடிப்பதாக இருந்தது. படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகி விட்டதாக செய்திகள் வெளியாகியது.
இதையும் படிங்க: ஹப்பாடி ஒருவழியா மொத்த பிரச்னையும் முடிச்சி விட்டாங்கையா… செழியனும், ஜெனி சேர்ந்தாச்சு…
அதோடு இப்போது ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து விலகியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதற்கான காரணம் என்ன என்பதை பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் அவருடைய யூடியூப் சேனலில் கூறியிருக்கிறார். தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதம் தள்ளி வைப்பதாக தெரிகிறது.
மேலும் கமல் தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்ல இருப்பதாலும் இரண்டு மாதம் கழித்து தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்பதாலும் மற்ற நடிகர்களின் கால்ஷீட்களில் பிரச்சினை ஏற்படும். அதனாலேயே துல்கர் சல்மான் இந்த படத்திலிருந்து விலகியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: என்னங்க ஒரு முடிவுக்கு வாங்க? முத்து மாட்டுவாரா இல்ல தப்பிச்சிடுவாரா? ஆர்வத்தில் ரசிகர்கள்!…
அது மட்டுமல்லாமல் இப்போது ஜெயம் ரவியும் இந்த படத்திலிருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை என சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார். துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு இந்த படத்தில் இணைந்திருக்கிறார். அவருடைய 48வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக தாமதமாகுவதால் சிம்பு இப்போதைக்கு தக் லைஃப் படத்தில் இணைந்து இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகி வருகிறது என சித்ரா லட்சுமணன் கூறினார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…