இதனாலதான் ‘கோட்’ ஆடியோ லான்ச் வைக்கலையாம்!.. என்னென்னமோ சொன்னாங்களே!..
Goat Movie: ஒரு படத்திற்கு அதுவும் பெரிய நடிகர்களின் படத்துக்கு இசை வெளியீட்டு விழா என்பது மிக மிக முக்கியம். ஆனால் கோட் படத்தை பொறுத்தவரைக்கும் ஆடியோ லான்ச்சே வைக்கவில்லை. இதுவரை வெளியான விஜயின் பெரிய படங்களுக்கு எல்லாம் ஆடியோ லான்ச் பெரிய அளவில் நடைபெற்றது. அது மக்கள் மத்தியில் இன்னும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
எல்லாவற்றையும் தாண்டி விஜய் சொல்லப்போகும் குட்டி ஸ்டோரியை கேட்பதற்காகவே ரசிகர்கள் காத்திருப்பார்கள். ஆனால் கோட் படத்தில் அப்படி எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தொடர்ந்து படத்தை பற்றி பல விஷயங்களை கூறி வருகிறார்.
இதையும் படிங்க: அந்த ஒரு படத்தில் நடிச்சதால 23 பட வாய்ப்பை மிஸ் பண்ண நடிகை! இப்ப அவங்க நிலைமை?
அதில் அர்ச்சனாவிடம் படம் என்றாலே படத்தில் நடிக்கும் நடிகர்கள் ப்ரோமோஷன் வந்தால் இன்னும் அந்தப் படத்தின் மீது ஹைப் அதிகமாகும். ஆனால் கோட் படத்தில் விஜய் எந்தவொரு பேட்டியும் கொடுக்கவில்லை. அவர் கொடுத்திருந்தால் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா என அடுத்தடுத்து பல பேட்டிகள் கொடுத்து இன்னும் படத்தை பெரிய அளவில் ப்ரோமோட் செய்திருப்பார்களே? இது உங்களுக்கு வருத்தமாக இல்லையா? என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அர்ச்சனா நம் கோலிவுட்டில் ரசிகர்களுக்கு ஒரு பெரிய படம் வேண்டும் அவ்வளவுதான். ஆனால் பாலிவுட்டை பொறுத்தவரைக்கும் நடிகர்கள் தங்களுடன் வந்து உரையாட வேண்டும் என ரசிகர்கள் விரும்புவதால்தான் அங்கு நடிகர்கள் ப்ரோமோஷனுக்கு செல்கிறார்கள். இங்கு படத்தின் ஸ்கிரிப்ட் பேசவேண்டும், கண்டெண்ட் பேசவேண்டும். அதுவும் நாங்கள் ஏற்கனவே மெட்ரோ என பல ஊர்களில் ப்ரோமோஷன் செய்து விட்டோமே என அர்ச்சனா கூறினார்.
இதையும் படிங்க: ரஜினியை செருப்பால அடிப்பேன்னு சொன்ன பாலசந்தர்…! நடந்தது இதுதான்..!
ஏன் ஆடியோ லாஞ்ச் வைக்கவில்லை என்று அர்ச்சனாவிடம் கேட்ட போது அதற்கு அர்ச்சனா கல்பாத்தி எங்களுக்கு முதலில் நேரமே இல்லை. முழுவதும் டிராவலில்தான் இருந்தோம். அவ்வளவு கிராஃபிக்ஸ் வேலைகள் படத்தில் இருந்தன. சாதாரணமாக சென்னையில் 5 செட் போட்டு படத்தை எடுக்கவில்லை. பல நாடுகளுக்கு சென்று படமாக்கியிருக்கிறோம்.
படத்தில் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண சீனுக்கு கூட அந்தளவு மெனக்கிட்டிருக்கிறோம். விஜயின் டீஏஜிங்கை விமர்சித்த பிறகு மீண்டும் அதை ரீ வொர்க் செய்து மாற்றியிருக்கிறோம். இப்படி முழுவதுமாக வேலையில்தான் இருந்தோம். இப்படி இருக்கும் போது ஆடியோ லாஞ்ச் வைக்க எப்படி நேரம் இருக்கும் என அர்ச்சனா கல்பாத்தி கூறினார்.
இதையும் படிங்க: போட்டிக்கு வர்ற கங்குவா படத்தைப் பற்றி ரஜினி என்ன நினைப்பாரு? வேற லெவல் திங்கிங்..!
ஆனால் இதற்கு முன் விஜய்தான் ஆடியோ லாஞ்ச் வேண்டாம் என சொன்னதாகவும் அரசியலையும் சினிமாவையும் சம்பந்தப்படுத்தி பேசிவிடுவார்கள் என்று கருதியதால் விஜய் வேண்டாம் என சொன்னதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் உண்மையான காரணத்தை அர்ச்சனா கல்பாத்தி கூறியிருக்கிறார்.