இவர் மட்டும் இல்லைனா? பிரபுதேவாவை மைக்கேல் ஜாக்சனாக மாற்றியவர் - சத்தியமா அவர் அப்பா இல்லைங்கோ

by Rohini |
prabhu
X

prabhu

Actor Prabhudeva: தமிழ் சினிமாவில் ஒரு குரூப் டான்சராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் நடிகர் பிரபுதேவா. அதன் பிறகு ஒரு சில பாடல்களில் மட்டும் தலையை காட்ட ஆரம்பித்தார். அதன் விளைவு படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

90களில் ஒரு முன்னணி ஹீரோவாக கலக்கிய பிரபுதேவாவிற்கு கூடுதல் பலமே அவருடைய நடனம்தான். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனாக மாறினார் பிரபுதேவா. அவர் மட்டுமில்லாமல் அவருடைய சகோதரர்களான ராஜு மாஸ்டர் மற்றும் நாகேந்திரபிரசாத் போன்றவர்களும் ஒரு அற்புதமான நடனக் கலைஞர்கதான்.

இதையும் படிங்க: ஸ்ரீதர் கேட்ட ஒரே ஒரு கேள்வி! ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை ரிமேக் செய்யும் எண்ணத்தை விட்ட மனோபாலா

இப்படி மூன்று பேரும் நடனத்தில் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்த காரணம் அவருடைய அப்பாவான சுந்தரம் மாஸ்டர் தான் என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுதான் இல்லை. பிரபுதேவா இந்தளவுக்கு ஒரு நடனப்புயலாக மாறியிருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருடைய குருவான தர்ம ராஜ் மாஸ்டராம்.

தர்மராஜ் மாஸ்டரும் சுந்தரம் மாஸ்டரும் நல்ல நண்பர்களாம். அதன் காரணமாகவே ஒரு குரு பக்தியோடு தனது நண்பரிடம் நடனம் கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என கருதியே தர்மராஜிடம் பிரபுதேவாவை நடனம் கற்றுக் கொள்ள செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு பிறகு கார்த்திக்குத்தான் அந்த அங்கீகாரம் கிடைச்சது! ‘பருத்திவீரன்’ குறித்து பேரரசு சொன்ன சீக்ரெட்

அவரிடம் இருந்து வந்ததுதான் இந்த ஆற்றல் என பல பேட்டிகளில் பிரபுதேவா கூறியிருக்கிறார். மின்சாரக்கனவு படத்திற்கும் ஹிந்தியில் ஒரு படத்திற்கும் தேசிய விருதை வாங்கிய பிரபுதேவா நேராக அவர் குருவிடம் கொண்டு போய் காண்பித்தாராம்.

அதற்கு அவர் தொழிலில் பயபக்தியோடு இருக்க வேண்டும் எனக் கூறி ஆசிர்வதித்தாராம். அதனாலேயே இன்று வரை தமிழில் இருந்து பாலிவுட் வரைக்கும் ஒரு நடனப் புயலாக மாறியிருக்கிறார் பிரபுதேவா என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ஜக்குபாய் வராமல் போனதற்கு இதுதான் காரணம்!.. பல வருடங்கள் கழித்து வெளியான சீக்ரெட்…

Next Story