Cinema History
சந்திரமுகி 2 பிளாப் ஆனதுக்கு காரணமே லாரன்ஸ்தான்!.. உடைச்சி சொல்லிட்டாரே பி.வாசு!..
Chandramukhi 2: சிவாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து 2005ம் வருடம் வெளியான திரைப்படம்தான் சந்திரமுகி. இதற்கு முன் ரஜினியின் பாபா படம் 2002ம் வருடம் வெளியாகி தோல்வி அடைந்தது. இதனால் நஷ்டமடைந்த வினியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்தார் ரஜினி.
எனவே, இனிமேல் ரஜினி அவ்வளவுதான் என சினிமாத்துறையில் பேசினார்கள். ஆனால், ஒருவிழாவில் ‘விழுந்தா எந்திரிக்காம இருக்க நான் யானை இல்ல குதிர’ என பன்ச் வசனம் பேசினார் ரஜினி. மலையாளத்தில் மோகன்லால் நடித்த மணிச்சித்ரத்தலு படத்தின் கதையை கன்னடத்தில் கொஞ்சம் மாற்றி எடுத்தார் பி.வாசு. இந்த படத்தில் விஷ்ணுவர்தன் ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்த படத்தை பார்த்து அதை தமிழில் எடுக்க ஆசைப்பட்டார் ரஜினி. அப்படி உருவான படம்தான் சந்திரமுகி. ரஜினி, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர் என பலரும் நடித்து வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. ரிலீஸாகி 50 நாட்கள் கடந்த பின்னரும் தியேட்டரில் கூட்டம் குறையவில்லை.
இந்த படத்தில் வேட்டைய மன்னன் என்கிற வேடத்திலும், சரவணன் என்கிற மனநல மருத்துவர் வேடத்திலும் நடித்திருந்தார் ரஜினி. வேட்டைய மன்னனாக ரஜினி கொடுத்த அசத்தலான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதன்பின் சில வருடங்கள் கழித்து சந்திரமுகி 2-வை எடுத்தார் பி.வாசு. ஆனால், ரஜினி நடிக்கவில்லை.
அவருக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடித்தார். ராதிகா, வடிவேலு, நித்யா மேனன் உள்ளிட்ட சிலர் நடித்தனர். ஆனால், இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. குறிப்பாக சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடித்ததும் செட் ஆகவில்லை. அதோடு, இணையத்தில் லாரன்ஸை ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். பல மீம்ஸ்களையும் உருவாக்கி பதிவிட்டனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகமொன்றில் பேசிய பி.வாசு ‘சந்திரமுகி 2 தோத்து போனதுக்கு காரணம் அது ரஜினி சார் நடிக்க வேண்டிய படம். அவரிடம் கதை சொல்ல அவரும் நடிக்க சம்மதித்து விட்டார். ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அதன்பின்னர்தான் லாரன்ஸை நடிக்க வைத்தோம். லாரன்ஸுக்காக கதையில் சில மாற்றங்கள் செய்தோம். அது சரியாக அமையவில்லை’ என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: கல்யாண வீடா, இழவு வீடா? விஜய்க்குத் தெரியாதா? ஏன் இப்படி செஞ்சாரு? பொங்கும் பிரபலம்