கூல் சுரேஷுக்கு அடித்த பம்பர் ஆஃபர்! அட ஆட்டோவில் போனதுக்கு இப்படியா? யாருப்பா இந்த புண்ணியவான்?

by Rohini |
cool
X

cool

Cool Suresh: எந்த ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனாலும் அதில் முதல் ஆளாக வந்து அந்த படத்தை பற்றி வெறித்தனமான விமர்சனம் கொடுப்பதில் வல்லவர் நம் கூல் சுரேஷ் தான். சிம்புவின் தீவிர வெறியன் ஆன கூல் சுரேஷ் எந்தவொருபுதிய படம் வெளியானாலும் முதல் ஆளாக முதல் ஷோ பார்த்துவிட்டு தனக்கென சில கூட்டங்களை கூட்டிக்கொண்டு அந்தப் படத்தை பற்றி விமர்சனம் செய்யும் விதமே புதுமையானது.

அவருக்கு என ஒரு சில ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இதன் மூலமாகவே அவர் மிகவும் பிரபலமானார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களை முழுவதுமாக உற்சாகப்படுத்தினார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த கூல் சுரேஷ் வெளியில் இருப்பதைவிட வீட்டிற்குள் அப்பாவி முகத்துடன் மற்றவர்கள் பரிதாபப்படும் வகையில் நடந்ததன் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

இதையும் படிங்க: ஓவர் சீனா இருக்கே… மனோஜ் மற்றும் ரோகிணியால் கடுப்பாகும் ரசிகர்கள்… அடி வாங்கும் டிஆர்பி…

அதன் மூலம் அவர் இறுதிக் கட்டம் வரை பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடிந்தது. சில நேரங்களில் அழுவது சில நேரங்களில் காமெடி பண்ணுவது சில நேரங்களில் சரியாக பேசுவது என ஒரு நேர்மையான மனிதராகவே காணப்பட்டார் கூல் சுரேஷ். அது மட்டுமல்லாமல் பிரதீப் ஆண்டனியுடன் அவருக்கு இருந்த நெருக்கம் இன்னும் மக்களை அவர் பக்கம் இழுக்க காரணமாக இருந்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவருக்கு கிடைத்த மரியாதையே வேறு.

முன்பு இருந்ததை விட மிகவும் மதிக்கத்தக்க வகையில் மாறினார் கூல் சுரேஷ். அது மட்டுமல்லாமல் தன்னிடம் உதவி கேட்ட ஆட்டோக்காரர் ஒருவருக்கு தன்னுடைய நற்பணி மன்றத்தின் சார்பாக ஆட்டோவும் வாங்கி கொடுத்து அதன் மூலம் பலருடைய பாராட்டுகளை பெற்றார். பல நடிகர்கள் தொடர்ச்சியாக அவர்களால் முடிந்த உதவிகளை பல பேருக்கு செய்து வருகின்றனர். அவை இணையத்தில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் வெளியிட்டு வருவதை பார்க்க முடிகிறது.

இதையும் படிங்க: இனிமே எவனாச்சும் பாடி ஷேமிங் பண்ணுவானா?.. ஒரேயடியாக உடம்பை குறைத்த மஞ்சிமா மோகன்!..

அதைப் போல இப்போது கூல் சுரேஷ் அவரால் முடிந்த சில பல உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் அவரின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் பிரபல ஆர் ஆர் பிரியாணி கடை நிறுவனரை சந்திக்க ஒரு சமயம் ஆட்டோவில் போனாராம் கூல் சுரேஷ். அப்போது ஆர் ஆர் பிரியாணி ஓனர் கூல் சுரேஷிடம் எதில் வந்தாய்? என கேட்க இவர் ஆட்டோவில் வந்தேன் என சொல்லி இருக்கிறார்.

அதற்கு இவ்வளவு பிரபலமான ஒருவர் ஆட்டோவில் வருவதா என நினைத்த அந்த பிரியாணி கடை ஓனர் இரண்டு நாள் கழித்து வா என கூறி அனுப்பி விட்டாராம். அதேபோல் சுரேஷும் இரண்டு நாள் கழித்து அவரை பார்க்க போகும்போது திடீரென ஒரு காரை பரிசாக அளித்திருக்கிறார் அந்த பிரியாணி கடை ஓனர் .சமீபத்தில் வந்த புயலில் கூல் சுரேஷின் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாம். அதனால் தற்போது எங்கு போனாலும் ஆட்டோவில் தான் போகிறாராம். அதனால் இப்படிப்பட்ட ஒரு பிரபலமான ஒருவர் இனி ஆட்டோவில் வரக்கூடாது என்பதற்காக அந்த கடை ஓனர் காரை வாங்கி கொடுத்து கூல் சுரேஷை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/C7io82AuSBt/?igsh=MXN4aXhvbWRhbzNsYg==

Next Story