Categories: latest news

கூல் சுரேஷுக்கு அடித்த பம்பர் ஆஃபர்! அட ஆட்டோவில் போனதுக்கு இப்படியா? யாருப்பா இந்த புண்ணியவான்?

Cool Suresh: எந்த ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனாலும் அதில் முதல் ஆளாக வந்து அந்த படத்தை பற்றி வெறித்தனமான விமர்சனம் கொடுப்பதில் வல்லவர் நம் கூல் சுரேஷ் தான். சிம்புவின் தீவிர வெறியன் ஆன கூல் சுரேஷ் எந்தவொருபுதிய படம் வெளியானாலும் முதல் ஆளாக முதல் ஷோ பார்த்துவிட்டு  தனக்கென சில கூட்டங்களை கூட்டிக்கொண்டு அந்தப் படத்தை பற்றி விமர்சனம் செய்யும் விதமே புதுமையானது.

அவருக்கு என ஒரு சில ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இதன் மூலமாகவே அவர் மிகவும் பிரபலமானார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களை முழுவதுமாக உற்சாகப்படுத்தினார்.  பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த கூல் சுரேஷ் வெளியில் இருப்பதைவிட வீட்டிற்குள் அப்பாவி முகத்துடன் மற்றவர்கள் பரிதாபப்படும் வகையில் நடந்ததன் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

இதையும் படிங்க: ஓவர் சீனா இருக்கே… மனோஜ் மற்றும் ரோகிணியால் கடுப்பாகும் ரசிகர்கள்… அடி வாங்கும் டிஆர்பி…

அதன் மூலம் அவர் இறுதிக் கட்டம் வரை பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடிந்தது. சில நேரங்களில் அழுவது சில நேரங்களில் காமெடி பண்ணுவது சில நேரங்களில் சரியாக பேசுவது என ஒரு நேர்மையான மனிதராகவே காணப்பட்டார் கூல் சுரேஷ். அது மட்டுமல்லாமல் பிரதீப் ஆண்டனியுடன் அவருக்கு இருந்த நெருக்கம் இன்னும் மக்களை அவர் பக்கம் இழுக்க காரணமாக இருந்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவருக்கு கிடைத்த மரியாதையே வேறு.

முன்பு இருந்ததை விட மிகவும் மதிக்கத்தக்க வகையில் மாறினார் கூல் சுரேஷ். அது மட்டுமல்லாமல் தன்னிடம் உதவி கேட்ட ஆட்டோக்காரர் ஒருவருக்கு தன்னுடைய நற்பணி மன்றத்தின் சார்பாக ஆட்டோவும் வாங்கி கொடுத்து அதன் மூலம் பலருடைய பாராட்டுகளை பெற்றார். பல நடிகர்கள் தொடர்ச்சியாக அவர்களால் முடிந்த உதவிகளை பல பேருக்கு செய்து வருகின்றனர். அவை இணையத்தில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் வெளியிட்டு வருவதை பார்க்க முடிகிறது.

இதையும் படிங்க: இனிமே எவனாச்சும் பாடி ஷேமிங் பண்ணுவானா?.. ஒரேயடியாக உடம்பை குறைத்த மஞ்சிமா மோகன்!..

அதைப் போல இப்போது கூல் சுரேஷ் அவரால் முடிந்த சில பல உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் அவரின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் பிரபல ஆர் ஆர் பிரியாணி கடை நிறுவனரை சந்திக்க ஒரு சமயம் ஆட்டோவில் போனாராம் கூல் சுரேஷ். அப்போது ஆர் ஆர் பிரியாணி ஓனர் கூல் சுரேஷிடம் எதில் வந்தாய்? என கேட்க இவர் ஆட்டோவில் வந்தேன் என சொல்லி இருக்கிறார்.

அதற்கு இவ்வளவு பிரபலமான ஒருவர் ஆட்டோவில் வருவதா என நினைத்த அந்த பிரியாணி கடை ஓனர் இரண்டு நாள் கழித்து வா என கூறி அனுப்பி விட்டாராம். அதேபோல் சுரேஷும் இரண்டு நாள் கழித்து அவரை பார்க்க போகும்போது திடீரென ஒரு காரை பரிசாக அளித்திருக்கிறார் அந்த பிரியாணி கடை ஓனர் .சமீபத்தில் வந்த புயலில் கூல் சுரேஷின் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாம். அதனால் தற்போது எங்கு போனாலும் ஆட்டோவில் தான் போகிறாராம். அதனால் இப்படிப்பட்ட ஒரு பிரபலமான ஒருவர் இனி ஆட்டோவில் வரக்கூடாது என்பதற்காக அந்த கடை ஓனர் காரை வாங்கி கொடுத்து கூல் சுரேஷை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ:  https://www.instagram.com/reel/C7io82AuSBt/?igsh=MXN4aXhvbWRhbzNsYg==

Rohini

Recent Posts

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

24 minutes ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

2 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

8 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

9 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

9 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

9 hours ago