Connect with us
atlee

Cinema News

தொட்டதெல்லாம் துலங்குது! பிள்ளையார் சுழி போட்டது இந்த நடிகராச்சே – எட்டாக்கனியா மாறிய அட்லீ

 Atlee: ராஜாராணி என்ற படத்தின் மூலம் முதன் முதலில் தன் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த அட்லீ சங்கருடன் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். முதல் படத்திலேயே கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார் அட்லீ.

வெறும் 13 கோடியில் எடுக்கப்பட்ட ராஜா ராணி படத்தை 80 கோடி வசூலுக்கு வித்திட்டார் அட்லீ. அதிலிருந்தே இவர் மீது தமிழ் சினிமா தனிக் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டது. அதனை தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார்.

இதையும் படிங்க : ரெட் கார்டு ஒரு பக்கம் இருக்கட்டும்!.. எனக்கு ஸ்ரீதேவி பொண்ணு தான் வேணும் என அடம்பிடிக்கும் அதர்வா?

அட்லீ எடுத்த அனைத்து படங்களுமே வசுலில் சாதனை படைத்த படங்களாக மாறியதுதான் கோலிவுட்டின் ஒரு முக்கிய அங்கமாக அட்லீ மாறினார். சங்கரையே மிஞ்சும் அளவுக்கு இப்போது ஜவான் படத்தில் தனது அடுத்த வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.

வெளியான நாள் முதல் இன்றுவரை ஜவான் திரைப்படம் 520 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பாலிவுட் படங்கள் பெரும்பாலும் சமீபகாலமாக தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அட்லி கொடுத்த இந்த வெற்றியால் ஷாரூக்கான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

இதையும் படிங்க : பாத்தவுடனே தலையே சுத்துது!.. அழகை ஒப்பனா காட்டி உசுர வாங்கும் பிரக்யா!.

ஒரு வேளை மீண்டும் அட்லீயுடன் ஷாரூக்கான் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் வரூண் தவானுடன் தெறி படத்தின் ரீமேக்கையும் ஹிந்தியில் எடுத்துக் கொண்டிருக்கிறார் அட்லீ.

இந்த நிலையில் அட்லீயின் இந்த அசுர வளர்ச்சியை கண்டு சினிமா உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வழக்கம் போல நெட்டிசன்கள் அட்லீக்கு அமைந்த ராசி அப்படி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க : லைக்கா நிறுவனமாக இருந்தாலும் பாலிசில இருந்து மீறாத அஜித்! தடைகளை தாண்டி மீண்டும் கிளாஷாகும் பிரச்சினை

ஏனெனில் உதவி இயக்குனராக இருந்து அவர் முதன் முதலில் ஒரு குறும்படத்தை தான் எடுத்தார். அந்த குறும்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அந்த குறும்படத்தில் நடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதனால்தான் சிவகார்த்திகேயன் எந்த நேரத்தில் நடித்தாரோ அதிலிருந்தே அட்லீக்கு தொட்டதெல்லாம் துலங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறிவருகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top