Connect with us
vijay

Cinema News

விஜயின் ஹேர் ஸ்டைலுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா? ‘லியோ’ லுக்கை பற்றி ஹேர் ஸ்டைலிஸ்ட் பகிர்ந்த சீக்ரெட்

Vijay Hair Style Secret: விஜயின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியானது லியோ திரைப்படம். படம் வெளியாகி ஓரளவு ரசிகர்களை திருப்தி படுத்திய லியோ ஒருவாரத்தில் 450 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அடுத்ததாக விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் வேறொரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜயின் தலைமுடி பற்றிய சர்ச்சை அவ்வப்போது ரசிகர்களிடையே எழுந்தவண்ணம் இருந்தன. விஜய் விக் வைத்திருக்கிறார் என்று பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில் அவருக்கு ஹேர் ஸ்டைலிஷ்ட்டாக இருந்த தேவ் சக்திவேல் சமீபத்தில் ஒரு பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி! ஆத்மனை விட பயங்கரமான ஸ்டைலில் ரெடியாகும் சிம்பு – அசறவைக்கும் வீடியோ

ஒவ்வொரு படங்களிலும் விஜய் விதவிதமான ஹேர் ஸ்டைலில் காணப்படுகிறார். ஒரு வேளை விக் வைத்துதான் நடிக்கிறாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வந்தது. விஜய்க்கு தலையில் முடியே கிடையாது என்றும் ட்ரோல் செய்தும் வந்தார்கள். ஆனால் அதெல்லாம் பொய் என்று சக்திவேல் கூறியிருக்கிறார்.

விஜய் தனது ரசிகர்களுக்காக ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான லுக்கில் காட்சி தரவேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கிட்டு நடிப்பாராம். அதுமட்டுமில்லாமல் ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால் ஒரே ஹேர் ஸ்டைலில் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் தேவ் சக்திவேலிடம் கட் செய்ய வருவாராம்.

இதையும் படிங்க: கதையின் மீது நம்பிக்கை இல்லாமல் தயாரிப்பாளரே கொடுத்த தொல்லை… ஒரே படத்தால் ஓஹோ புகழ் கொடுத்த விக்ரமன்..!

எப்படி கட் பண்ண வேண்டும் என்று கேட்டால் எதுவுமே சொல்லமாட்டாராம். நீயே பார்த்து ஏதாவது பண்ணு என்று சொல்லிவிடுவாராம் விஜய். அதுதான் எனக்கு பெரிய சேலஞ்சாக இருக்கும் என சக்திவேல் கூறினார்.ஒரு வேளை சக்திவேல் கட் செய்தது பிடித்திருந்தால் சூப்பர் என்று சொல்வாராம்.

லியோ படத்திலும் அப்படித்தான் நடந்ததாம். நீண்ட தலைமுடியுடனேயே இருந்தாராம். அதை சக்திவேல் அவர் ஸ்டைலுக்கு ஏற்றவாறு கட் செய்துவிட்டு பார்க்கும் போது சக்திவேலுக்கே  மிகவும் பிடித்துப் போனதாம்.உடனே சந்தோஷத்தில் விஜயிடம் இதே லுக்கில் உங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக்குறேன் என்று சொல்லி புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம்.

இதையும் படிங்க: அரவிந்த்சாமியை ஏமாற்றிய தனுஷ்… எல்லாம் அவரு படம் ஓடுனதுனால வந்த மெதப்பு போல…

அதே சமயம் இந்த லுக் கண்டிப்பாக பெரிய திரையில் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக இருக்கும் என அப்பவே சக்திவேல் நினைத்தாராம். அவர் நினைத்ததை போன்றே ரசிகர்கள் விஜயின் ஹேர் ஸ்டைலை பார்த்து வியந்திருக்கிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top