Lawrence Rajini: தமிழ் சினிமாவில் ரஜினியை பின்பற்றி எத்தனையோ நடிகர்கள் சினிமாவிற்குள் நடிக்க வருகிறார்கள். அவர்களில் கண்டிப்பாக ரஜினியின் சாயலை பார்க்க முடியும். விஜயிடம் அதிகமாகவே பார்க்க முடியும். அதே போல் சிவகார்த்திகேயன், தனுஷ் இவர்களிடமும் ரஜினியின் சாயல் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். ஆனால் தான் நடிக்கும் படங்களாகட்டும்.
பாடலாகட்டும். ஆரம்பம் முதல் இன்று வரை ரஜினியையே முன்னிறுத்தி நடித்து வருபவர் நடிகர் லாரன்ஸ். ரஜினியின் உண்மையான பக்தர் லாரன்ஸ் என்றே சொல்லலாம். முனி படத்தில் இருந்தே ரஜினி சம்பந்தப்பட்ட படங்களின் காட்சிகள், ரஜினியின் பன்ச் டையலாக்குகள் என தன் படங்களில் காட்டி தான் உண்மையான ரஜினியின் திவீர ரசிகர் என்பதை நிரூபித்து வருகிறார்.
இதையும் படிங்க: தலைவர்171 படத்தில் அந்த நடிகரா…? 38 வருஷத்துக்கு பின்னர் நடக்க இருக்கும் மேஜிக்…
சந்திரமுகி 2 படத்திலும் நடித்ததன் மூலம் இன்னொரு ரஜினியை பார்த்த மாதிரி போன்ற ஒரு பிம்பத்தைத்தான் ஏற்படுத்தினார் லாரன்ஸ். மேலும் அவ்வப்போது ரஜினியை அவர் வீட்டில் சென்று சந்தித்து சரளமாக பேசக் கூடிய நடிகர்களில் லாரன்ஸும் இருக்கிறார். ரஜினியை கட்டியணைத்து தன் அன்பை பரிமாறிக் கொள்வார்.
இந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஹண்டர் என்ற ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் லாரன்ஸ். வெங்கட் மோகன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. ஏற்கனவே சந்திரமுகி 2 படத்தில் வேட்டையன் என்ற கேரக்டரில் லாரன்ஸ் நடித்தார். இன்னொரு பக்கம் ரஜினி த. ச. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார்,
இதையும் படிங்க: நடிகரின் காதலுக்கு எமனாக வந்த மைக் மோகன்! காதலி பிரிந்து போன சோகத்தில் புலம்பும் நடிகர்
இப்படி சூப்பர் ஸ்டாரின் ஃபேன் பாயாக ஓவ்வொரு படங்களிலும் தன்னை காட்டி வரும் லாரன்ஸ் இந்தப் படத்திற்கு ஹண்டர் என பெயர் சூட்டி இந்த படத்திலும் ரஜினியின் ரசிகர் என்பதை உணர்த்தியிருக்கிறார். ஹண்டர் என்றால் தமிழில் வேட்டையன். மேலும் ரஜினி 171 படத்தில் லாரன்ஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Good bad…
கங்குவா திரைப்படத்தில்…
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…