கமலைப் பார்த்து இப்பவும் பயப்படும் சீரியல் நடிகை… பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்!…

மெட்டி ஒலி சீரியலில் ராஜம்மாவாக வந்தவர் சாந்தி வில்லியம்ஸ். இவரது கணவர் பெயர் வில்லியம்ஸ். இவர் ஒரு ஒளிப்பதிவாளர். இவர் ஆரம்பகாலத்தில் கமலிடம் நடனம் கற்றவர். மலையாளப்படம் ஒன்றில் கமலுடன் ஜோடியாகவும் ஆடினாராம். பாபநாசம் படத்தில்  நடித்துள்ளார். கமலுடனான அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.

கமல் எங்கே பார்த்தாலும் என்னை மிரட்டுவாரு. ஏய்… என்னடின்னு சொல்வாரு. பாபநாசம் படத்துல என்னைப் பார்த்தார். மாஸ்டர்ஜி வணக்கம் என சொன்னேன். ‘நீ ஏன்டி பயப்படுற… வயசாயிடுச்சு. எனக்கும் வயசாயிடுச்சு. ஏன் இன்னும் என்னைப் பார்த்துப் பயப்படுற..?

இதையும் படிங்க… விஜயா உங்களுக்கு ஆனா இவ்வளோ ஆசை கூடாது… வேண்டாத மருமகள்கிட்ட இதை கேட்கலாமா?

இந்த மாஸ்டர்ஜின்னு கூப்பிடுறதை நீ விட மாட்டியா?’ ன்னு கேட்டாரு. இல்ல மாஸ்டர்ஜி… நீங்க அன்னைக்கு வந்து எனக்கு குரு. அது எப்பவுமே உண்டு. அதனால நான் உங்களை அப்படித்தான் கூப்பிடுவேன்னாரு. ‘பார்த்தியா என்னைப் பார்த்து எப்படி கூப்பிடுறா?’ன்னு கவுதமியிடம் கெத்தாக சொன்னாராம் கமல்.

கமலுக்கும் உங்கள் கணவர் வில்லியம்ஸ்க்கும் என்ன பிரச்சனை என்று சித்ரா லெட்சுமணன் கேட்டபோது இவ்வாறு சொல்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.

விஷ்ணுவிஜயன் படத்துல நான் தான் அவனைப் போட்டேன்னு கமல் சொல்வாராம். ராசலீலா படத்துல அவரை கமல் சேரை எடுத்து அடிக்கப் போனாராம். அதனால கமல் சாருக்கு வில்லியம்ஸைப் பார்த்தாலே பிடிக்காது. அவரைக் கல்யாணம் கட்டுனது அவருக்குப் பிடிக்கல.

இதையும் படிங்க… ஈஸ்வரியிடம் நெருங்கும் ராதிகா…விலகும் பாக்கியா… என்னங்க நடக்குது இங்க?

என்னோட 11 வயசுல தங்கப்பன் மாஸ்டர்கிட்ட பிராக்டிஸ்க்கு போவோம். அப்போ முக்கிட்கலை கண்ணம்மாங்கற படம் பண்ணுனோம். அது ஃபுல்லா டான்ஸ் குரூப் பற்றிய கதை. அப்போ எனக்கு டான்ஸ் எல்லாம் சொல்லிக்கொடுத்தாரு. அந்தப் படத்துல எங்கூட ஜோடியா ஆடுனாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1975ல் சங்கரன் நாயர் இயக்கிய படம் ராசலீலா. இந்தப் படத்தில் கமலுடன் ஜெயசுதா, கனகதுர்கா, ராஜஸ்ரீ உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.சி.சக்தி கதை எழுதியுள்ளார். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

Recent Posts

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

6 minutes ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

3 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

15 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

16 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

17 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

18 hours ago