நான் ரெக்கார்டு செய்த அந்தப் பாடல் தான் அஜீத்தோட லவ் லட்டர்... பரத்வாஜ் சொல்லும் புதுத்தகவல்
அஜீத்துடன் அமர்க்களம் படத்தில் இணைந்து பணியாற்றினார் இசை அமைப்பாளர் பரத்வாஜ். அது தவிர காதல் மன்னன், அசல், திருப்பதி, அட்டகாசம் படங்களுக்கும் அவர் தான் மியூசிக் போட்டுள்ளார். அஜீத்துக்கும், ஷாலினிக்கும் அமர்க்களம் படத்தின் போது தான் காதல் மலர்ந்தது. அந்த வகையில் இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி அட்டகாசமாக ஒத்துப் போனது. அவர்கள் நடித்த காட்சிகளைப் பார்க்கும்போதே நாம் உணர முடியும்.
அதிலும் அஜீத் ஷாலினியைக் கடத்தி வந்து மலையில் வைத்து பாடும் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலை அப்போது திரையில் பார்க்கும்போது தியேட்டரே அதிர்ந்தது. அவ்வளவு எமோஷனலை அஜீத் காட்டியிருப்பார். அந்தப் படத்தில் அவரது கேரக்டரே ரொம்பவும் வித்தியாசமாக அமைந்திருக்கும். அந்த வகையில் அஜீத்துடன் பயணித்த நாள்கள் குறித்து இசை அமைப்பாளர் பரத்வாஜ் சொல்லும் சில தகவல்கள் பற்றிப் பார்ப்போமா...
அஜீத்துடன் அமர்க்களம் படத்தின் சூட்டிங்கில் பார்த்தேன். அது ஒரு பைட் சீன். ஒரு கார் மேல ஜம்ப் பண்ணி அப்படி இப்படி குதிச்சி போவார். ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் அவரை படுக்கையில பார்த்தேன். அதுக்கு முன்னாடி மாசக்கணக்குல தலையில இருந்து கால் வரை கட்டுப் போட்டுப் படுத்துக் கிடந்துள்ளார். ஆனால் அமர்க்களம் படத்துல இப்படி பைட் பண்றாரு. அந்த அளவு தன்னம்பிக்கை உள்ள நபர் அஜீத்.
இதையும் படிங்க... அஜீத் படத்தில் விஜயைத் தாக்கி பாடல் வரிகள்.. பரத்வாஜ் என்ன சொல்கிறார்னு பாருங்க!..
அவர் ஒரு எளிமையான நபர். பைக் ரேஸ்க்கு மோட்டிவேஷனா டியூன் போட்டுக் கொடுங்கன்னாரு. போட்டுக் கொடுத்தேன். கல்யாணத்துக்கு டியூன் போட்டுக் கேட்டாரு. உன்னோடு வாழாத என்ற பாட்டு ரெக்கார்ட் பண்ணிக் கேட்டாரு. அப்புறம் கேள்விப்பட்டேன். அதைத் தான் லவ் லட்டரா கொடுத்தார்.
சமீப காலமாக அவரு வேற ஒரு யுனிவர்சல்க்கு போன மாதிரி அவரைத் தொடர்பு கொள்ள முடியல. அவரும் பண்ணல. அவரு எனக்கு சப்போர்ட்டும் பண்ணலங்கறது உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.