Categories: Cinema News latest news

லியோ டிரெய்லரால் வந்த குழப்பம்!. அட செம டிவிஸ்ட் வச்சிருக்காரே லோக்கி!. அதான் விஷயமா?!..

Lokesh kangaraj : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாக இருக்கிறது. ஏனெனில், லோகேஷ் கனகராஜுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உருவாகியிருக்கிறது. அவர் இயக்கும் படங்களில் அவருடைய முந்தையை படங்களின் தொடர்ச்சி இருப்பதை LCU என ரசிகர்கள் சொல்கிறார்கள்.

மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார்தான் இப்படத்தையும் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் விஜய் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியானது.

இதையும் படிங்க: லியோ ஸ்பெஷல் ஷோவுக்கும் செக்!.. விஜய் ரசிகர்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு!.

அதில், காஷ்மீரில் அமைதியாக மனைவி, குழந்தையுடன் வசித்துவரும் விஜயை ரவுடி கும்பல் தேடி வந்து கொல்ல முயற்சி செய்வது போலவும், இது எதுவுமே தெரியாது போல விஜய் குழப்பமடைவது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.

இந்த டிரெய்லரில் விஜய் பேசிய ஒரு வசனமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பெண் அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்தன. சமூகவலைத்தளங்களில் பலரும் விஜயை விமர்சித்தனர். இதுபற்றி ஊடகம் ஒன்றில் விளக்கமளித்த லோகேஷ் கனகராஜ் கோபத்தில் அந்த கதாபாத்திரம் பேசுவதால் அந்த வசனத்தை வைத்தேன்’ என சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: உங்க சவகாசமே வேணாம்டா சாமி! இல்லாததுக்கே இவ்ளோ வேலை பாத்துட்டாங்க – ‘லியோ’வால் கடுப்பான ரெட்ஜெயண்ட்

டிரெய்லரில் தன்னை எதற்காக வில்லன் குரூப் கொல்ல முயற்சி செய்வதில் குழப்பமும், கோபமும் அடையும் விஜய் ‘என்னை போலவே இருக்கும் ஒருவனால்தான் இந்த பிரச்சனை’ என்பது போல் வசனம் பேசுகிறார். இதுதான் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய்தானே ஹீரோ, வில்லன் குரூப் தேடி வருவதே லியோ விஜயைத்தானே. அப்படி இருக்கும்போதே விஜயே அது எதுவும் தெரியாதது போல பேசுகிறாரே என சிலர் குழப்பமடைந்தனர். இந்நிலையில், லியோ விஜய் ஒரு விபத்தில் சிக்கி எல்லாவற்றையும் மறந்துவிட்டு காஷ்மீரில் அமைதியான வாழ்க்கை வாழ்வது போலவும், அதன்பின் அவருக்கு பழைய நினைவுகள் வந்து வில்லன் குரூப்பை போட்டு பொளந்து கட்டுவது போலவும் லோகேஷ் திரைக்கதை அமைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இது உண்மையா என்பது படம் வெளியாகும் போதுதான் தெரியவரும்!…

இதையும் படிங்க: ‘விக்ரம்’ படத்துல மிஸ் ஆனத இந்த படத்துல புடிச்சுட்டேன்! லியோ படம் பற்றிய சீக்ரெட்டை பகிர்ந்த லோகேஷ்

Published by
சிவா