இத ஒரு படமாவே எடுக்கலாமே? சூர்யா எந்த நேரத்தில் எப்படிப்பட்ட சூழலில் பிறந்தார் தெரியுமா?

Published on: May 7, 2024
surya
---Advertisement---

Actor Surya: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் சினிமா மீது அக்கறை இல்லாமல் சினிமாவே பிடிக்காத அளவுக்கு இருந்த சூர்யா இப்போது தமிழ், ஹிந்தி என பிற மொழி படங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார் சூர்யா.

அவருடைய நிறுவனம் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்திருக்கிறார் சூர்யா. ஆரம்பத்தில் யாருடனும் அதிகமாக பேசாமல் மிகவும் அமைதியாகவே இருந்தவர் இன்று அனைவரும் பிரம்மிக்கத்தக்க வகையில் ஒரு மாபெரும் நடிகராக வளர்ந்து நிற்கிறார் என்றால் அவருடைய கடின உழைப்பும் முயற்சியுமே காரணமாகும். இந்த நிலையில் சூர்யா எப்படிப்பட்ட ஒரு சூழலில் பிறந்தார் என்பதை சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: அந்த நடிகர் போட்டோவை பார்த்து உருகிய விஜே அர்ச்சனா… அப்போ உண்மைதானா அது?

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது அம்மா பிரசவத்திற்காக அவருடைய ஊருக்கு செல்ல வேண்டும் என சிவகுமாரிடம் சொல்ல சிவகுமாரோ உன்னுடைய ஊரிலிருந்து கோவை மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றால் வெகு நேரம் ஆகும். சரியான மருத்துவமனை வசதியும் இல்லை. அதனால் இங்கேயே இருந்து பிரசவம் பார்த்துக்கொள்ளலாம். வேண்டுமென்றால் உன் அம்மாவை இங்கே வரச்சொல் எனக் கூறியிருக்கிறார்.

அவர் அம்மாவும் சிவகுமார் பேச்சை மீறாமல் இங்கு வந்து தன் மகளின் பிரசவத்தை அருகிலிருந்து பார்த்தாராம் . பிரசவத்திற்கு மூன்று நாள் இருக்கும் நிலையில் கல்யாணி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று இருக்கிறார்கள். சிவகுமாரின் மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள் இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. அதனால் இப்பொழுது போய்விட்டு நாளை வாருங்கள் என சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கார் டிரைவருக்காக அப்படி ஒரு விஷயத்தைச் செய்த கேப்டன்…! அந்த மனசு தான் கடவுள்..!

ஆனால் அன்று இரவே கடும் மழை. சிவகுமாருக்கு மருத்துவமனையில் இருந்து போன் வந்திருக்கிறது. உங்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று. மழையையும் பொருட்படுத்தாமல் கல்யாணி மருத்துவமனை நோக்கி சிவக்குமார் ஓடி வர அங்கு தன் மகன் சூர்யாவை மிகவும் ஆனந்தத்துடன் கண்ணீர் மல்க உற்று நோக்கி பார்த்தாராம் சிவக்குமார். இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் சூர்யா பிறந்தார் என சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.