உயிர்தான் முக்கியம்! கால்ஷீட் வேணாம்.. நடிகரால் தப்பிச்சோம் பிழைச்சோம்னு வந்த இயக்குனர்

0
256
karthi
karthi

Tamil Actors: குடி எந்த அளவுக்கு ஒரு மனுசனின் மூளையை மழுங்கடிக்கும் என்பதற்கு ஒரு உதாரணமாக தான் சினிமாவில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பிரபல பத்திரிகையாளரான வலைப்பேச்சு அந்தணன் ஒரு நடிகரிடம் கதை சொல்லப் போன இயக்குனர் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார் என்பதை பற்றி ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்து இருக்கிறார். பிரபல மூத்த நடிகர் மகனாம் அந்த நடிகர். ஆனால் அந்த நடிகர் யார் என்பதை வலைப்பேச்சு அந்தணன் கூற மறுத்துவிட்டார்.

இந்த வாரிசு நடிகர் படப்பிடிப்பிற்கு வரும்போது குடித்துவிட்டு தான் வருவாராம் .ஓரளவுக்கு குடித்து வசனங்கள் பேசும் அளவுக்கு கொஞ்சம் தெளிவாகத்தான் இருப்பாராம். மகாபலிபுரத்தில் ஒரு நாள் ஷூட்டிங்கில் இருக்கும் போது அவரை பார்க்க ஒரு இயக்குனர் வந்திருக்கிறார். அந்த இயக்குனரை வரச் சொன்னதே இந்த நடிகர் தானாம். அப்போது  இரண்டு மணி நேரத்தில் படப்பிடிப்பு முடிந்துவிடும். அதன் பிறகு சென்னை போகும் வழியிலேயே காரிலேயே கதை சொல். கேட்டுக் கொண்டே போகலாம் என அந்த நடிகர் கூர படப்பிடிப்பு முடிந்ததும் இருவரும் காரில் புறப்பட்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: நான் நடிச்ச சீன் படம்!. என் தம்பி பாத்துட்டு என்ன பண்ணான் தெரியுமா?!.. ஷகீலா சொன்ன பகீர் தகவல்!..

காரை இந்த நடிகர் தான் ஓட்டிக்கொண்டு வந்தாராம். அப்போது பைபாஸில் இந்த நடிகர் கார் ஓட்டும்போது அருகில் இருந்த ஒரு கார் மின்னல் வேகத்தில் இவருடைய காரை கிராஸ் செய்து சென்று கொண்டிருந்ததாம். உடனே இந்த நடிகர் என்னையா கிராஸ் பண்ணி போற என நினைத்து 120 கிலோமீட்டர் வேகத்தில் காரை இழுத்து ஓட்டி இருக்கிறார். இந்த நடிகர் அப்போது லைட்டாக குடித்திருந்தாராம். அந்த சமயத்தில் அருகில் இருந்த இயக்குனர் சார் கொஞ்சம் மெதுவாக போங்கள் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காத அந்த நடிகர் மிகவும் வேகமாக ஓட்டியிருக்கிறார்.

அதன் பிறகு திருவான்மியூர் அருகே வந்ததும் இந்த நடிகர் அந்த காரை முந்திக்கொண்டு சென்று விட்டாராம். அப்போதுதான் இந்த நடிகருக்கு பெரும் சந்தோஷமே பிறந்ததாம். நேராக அந்த கார் ஒரு ஹோட்டலில் புகுந்ததாம் .காரில் இருந்து இறங்கியதும் அந்த நடிகர் நாளைக்கு வா கதை கேட்கலாம் என சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: கார்த்திக்கிடம் இருக்கிற ஒரே பிரச்சினை இதுதான்! குளிர்ல என்ன நடந்துச்சு தெரியுமா? மீனா சொன்ன சீக்ரெட்

உடனே அந்த இயக்குனரும் நாளை அந்த ஹோட்டலுக்கு வர கீழே இருந்த ஊழியர்கள் உங்களை இப்பொழுது பார்க்க முடியாது என சொல்லிவிட்டார் என சொல்லி அனுப்பி விட்டார்களாம். இப்படியே மூன்று நாள் அந்த இயக்குனர் இந்த ஹோட்டலுக்கு வந்து காத்துக்கொண்டே இருந்தாராம்.

கிட்டத்தட்ட மூன்றாவது நாளில்தான் அந்த நடிகர் கீழே இறங்கி இருக்கிறார். அப்போது அவரின் தோற்றத்தை பார்த்த இந்த இயக்குனர் இவரை வைத்தா நாம் படம எடுக்க வேண்டும்? ஆரம்பமே இப்படி இருக்கிறது. போகப் போக எப்படி இருக்குமோ என நினைத்து படமே வேண்டாம் என வந்துவிட்டதாக வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

google news