Tamil Actors: சினிமாவில் நடிக்க வரும் ஒரு சில பேர் ஆரம்பத்திலேயே அவர்களுக்கு என சில கொள்கைகளை வைத்திருப்பார்கள். இந்த மாதிரி நடிக்க வேண்டும் இந்த மாதிரி நடிக்க கூடாது என ஒரு தீர்க்கமான முடிவிலேயே சினிமாவிற்குள் வந்திருப்பார்கள். அப்படி வந்த நடிகர்கள் யார் யார்? அவர்கள் வைத்திருந்த கொள்கைகள் என்னென்ன என்பதை தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம்.
அதில் முதலாவதாக எம்.ஜி.ஆர். நடிப்பை பொறுத்தவரைக்கும் எம்.ஜி.ஆர் சில கொள்கைகளை வைத்திருந்தார். பெண்களை கற்பழிப்பது, அவர்களை கேவலமாக பேசுவது, மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் இதுவரை எம்ஜிஆர் நடித்ததே இல்லை. ஏனெனில் எம்ஜிஆருக்கு என தமிழகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்த நிலையில் அவர் இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கும்போது அவரை பின்பற்றும் இளைஞர்களும் அந்த காட்சியில் நடிப்பார்கள் என்ற காரணத்தினால் எம்ஜிஆர் அவ்வாறு நடித்ததே இல்லை.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கொடுத்த முத்தம்!.. 2 நாட்கள் முகத்தை கழுவாமல் இருந்த நடிகை… அட அவரா?!..
இவரை பின்பற்றி வந்தவர் தான் ராமராஜ். அவரும் புகை அருந்துவது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். அதை இன்று வரை அவர் பின்பற்றியும் வருகிறார். அடுத்ததாக டி ராஜேந்திரன். அவர் ஹீரோவாக நடித்த வரைக்கும் எந்த பெண்களையும் தொட்டு அவர் நடித்ததே இல்லை. அவருக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின்களை கூட அவர் தொட்டு நடித்தது கிடையாது.
அதைப்போல அவர் பெரும்பாலும் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட படங்களில் தான் நடித்திருக்கிறார். தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளை கூட அவர் தொட்டு நடித்தது கிடையாது. அந்த அளவுக்கு அதில் உறுதியாக இருந்தார் டி ராஜேந்திரன். அதைப்போல நடிகர் ராஜ்கிரண் ஹீரோ மெட்டீரியல் இல்லாத ஒரு நடிகர் என்றாலும் அவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியடைந்து இருக்கின்றது.
இதையும் படிங்க: பாரதிராஜாவுக்கு முன்னாடியே ரேவதிக்கு ‘பளார்’ கொடுத்த பாண்டியன்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த களேபரம்!..
அவர் நடித்த படங்களில் இதுவரை அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததே கிடையாது. ஹீரோவாக நடித்திருக்கிறார். குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். ஆனால் வில்லன் கதாபாத்திரத்தில் இதுவரை அவர் நடித்ததே கிடையாது. நடிக்கவும் மாட்டேன் என்ற கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார். இவர்கள் வரிசையில் அடுத்ததாக மோகன் ஒரே ஒரு படத்தை தவிர அவர் நடித்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் சொந்த குரலில் நடித்ததே கிடையாது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…