என்ன எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது! குடிச்சுட்டு கார் ஓட்டி அலப்பறை செய்த நடிகர்கள்

Published on: August 15, 2023
arun
---Advertisement---

தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகர்கள் மட்டுமில்லாமல் நடிகைகளும் குடிபோதையில் காரை
ஓட்டுகிறேன் என்ற பேர்வழியில் தாறு மாறாக ஓட்டி போலீஸில் சிக்கி அபராதமும் கட்டியிருக்கின்றனர். யார் அந்த நடிகர்கள், நடிகைகள் என்றுதான் இந்த லிஸ்டில் பார்க்க போகிறோம்.

நடிகர் சக்தி: பிரபல இயக்குனரான பி.வாசுவின் மகனான சக்தி வாசுதேவ் ஆரம்பத்தில் கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்து ஓரளவு வரவேற்பை பெற்றவர். இடையிலேயே காணாமல் போன சக்தி ஒரு டிரங்க் டிரைவ் கேஸில் சிக்கி சின்னபின்னமாகி மக்கள் மத்தியில் தெரிய ஆரம்பித்தார். சூளைமேட்டில் குடித்துவிட்டு கார் ஓட்டி சும்மா இருந்த ஆட்டோ மீது மோதி அலப்பறை செய்திருக்கிறார். அதன் பின் இரண்டு வழக்குகளில் கைதாகி அபராதமும் கட்டி வெளியே வந்தார்.

இதையும் படிங்க : எங்களுக்குள்ள எவ்ளவோ பகை இருந்தாலும் அவர்தான் சூப்பர் ஸ்டார்! ரஜினியை கொண்டாடிய சத்யராஜ்

நடிகை காயத்ரி ரகுராம் : பிரபல நடன இயக்குனரான ரகுராமின் மகளான காயத்ரி ரகுராமும் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பும் போது டிரங்க் டிரைவ் கேஸில் மாட்டினார். ஆனால் தான் அரசியலில் வரப் போகிறேன் என்று சொல்லி காரை மட்டும் அங்கேயே வைத்து விட்டு வீட்டிற்கு ஆட்டோவில் வந்துவிட்டார்.மறு நாள் ட்விட்டரில் அவரே பதிவை போட்டு என் மீது தேவையில்லாத கேஸ் போட்டு சிக்க வைக்கப் பார்க்கிறார்கள் என்று தானாக சிக்கி கொண்டார் காயத்ரி ரகுராம்.

நடிகர் ஜெய் : தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக வலம் வரும் ஜெய் இயல்பாகவே ஒரு டிராக் ரேஸராம். முதன் முதலில் அவர் காரில் செம போதையில் குடித்து விட்டு ரோட்டோரம் இருந்து டிவைடர் மீது மோதியிருக்கிறார். அதன் பிறகு போலிஸ் வந்து வழக்கு பதிவு செய்து இவரது லைசன்ஸை 6 மாதத்திற்கு ரத்து செய்திருக்கிறது. 6மாதம் கழிந்தாலாவது திருந்துவார் என்று பார்த்தால் மீண்டும் அதே தவறை செய்திருக்கிறார். பின் கை கால்களில் விழுந்து அபராதம் கட்டி வெளியே வந்திருக்கிறார்.

இதையும் படிங்க : சிவாஜியை வைத்து படம் எடுத்தேன்.. எம்.ஜி.ஆரை வைத்து பணம் எடுத்தேன்!. சொன்ன இயக்குனர் யார் தெரியுமா?..

நடிகர் விஷ்ணு விஷால்: சமீபத்தில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் விஷ்ணு விஷால். ஆனால் இவர் குடித்துவிட்டு காரை ஓட்டி அலப்பறை செய்யவில்லை. குடித்து தனது நண்பர்களுடன் தான் தங்கியிருந்த ஃபிளாட்டில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். இவர்கள் செய்த அலப்பறையை தாங்க முடியாத பக்கத்து வீட்டுக்காரர்கள் வெளியே வந்து இவரை சத்தம் போட்டிருக்கிறார்கள். இருந்தாலும் விஷ்ணு விஷால் அடங்கவில்லை. அதன் பின் போலீஸில் புகார் செய்தார்களாம். ஆனாலும் இவரின் அப்பாவே ஒரு டிஐஜி என்பதால் போலிஸூக்கு பயப்பட வில்லை. அதன் பின் சமாதானம் செய்து படுக்க வைத்திருக்கின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.