எல்லாருக்கும் ஒரு டர்னிங் பாயிண்ட்! அப்படி முன்னனி நடிகர்களுக்கு திருப்புமுனையாக இருந்த படங்களின் பட்டியல்

by Rohini |
vijay
X

vijay

Top hero's best movies: தமிழ் சினிமாவில் இன்று நாம் பார்க்கும் பல முன்னனி நடிகர்கள் ஆரம்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகளை கடந்து தான் இன்று அந்த இடத்தை அடைந்திருக்கின்றனர். அந்தவகையில் அவர்களுக்கு எந்த படங்கள் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பதை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.

அஜித்: இன்று ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுமே கொண்டாடும் ஒரு நடிகராக அஜித் இருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு காதல் மன்னனாகவே வலம் வந்த அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக தீனா அமைந்தது. இந்தப் படத்தின் மூலம்தான் ஒரு முழு ஆக்‌ஷன் ஹீரோவாக மக்கள் முன் அறியப்பட்டார்.

இதையும் படிங்க: தனி ஒருவன் படத்தின் வில்லன் இவர் தானா? அடடே! இத நாங்க யோசிக்கவே இல்லையே! ரவியின் சர்ப்ரைஸ்!

விஜய்: விஜய் , அஜித் என இருவருமே சம காலத்தில் சினிமாவிற்குள் வந்தவர்கள். இருவருமே சமமான வெற்றி தோல்விகளை பார்த்தவர்கள். அஜித்தை போலவே விஜய்க்கு ஆரம்பத்தில் குடும்பபாங்கான திரைப்படங்களே வந்தன. பகவதி ஒரு ஆக்‌ஷன் படமாக அமைந்தாலும் அவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடத்தொடங்கியது கில்லி படத்தின் மூலம்தான்.அதிலிருந்தே விஜய்க்கு உண்டான மாஸ் அதிகரிக்க தொடங்கியது.

சூர்யா: நடிக்க தெரியாமல், நடனம் ஆடவும் தெரியாமல் வந்த சூர்யாவுக்கு காக்க காக்க திரைப்படம் மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது. போலீஸாக பெண்கள் மத்தியில் மிகவும் கவர்ந்த நடிகராக சூர்யா மாறினார்.

இதையும் படிங்க: விஜயிற்கு இந்த பழக்கமே கிடையாது… பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன்…! அனுஷ்காகே இப்டியா?

தனுஷ்: கிடைத்த கதைகளில் நடித்துக் கொண்டிருந்த தனுஷுக்கு வேலையில்லாத பட்டதாரி படம்தான் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. தனுஷை நடிகன் தனுஷாக மாற்றியது இந்தப் படம்தான்.

விக்ரம்: சினிமாவில் இருப்பாரா இருக்கமாட்டாரா என்ற சந்தேகமே விக்ரம் மீது எழுந்தது. அப்படி இருக்கும் போது பாலாவின் சேது படம் தான் விக்ரமை கரையில் வந்து சேர்த்தது. சேது படத்திற்கு பிறகு விக்ரமின் அபார வளர்ச்சியை பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஹாலிவுட்லயே கூப்பிட்டாங்க!.. கெத்து காட்டிய அட்லி.. மொக்கை பண்ணிய புளூசட்ட மாறன்..

ஜெயம்ரவி: தனி ஒருவன் படத்தில் போலீஸாக வலம் வந்த ஜெயர் ரவிக்கு அவர் நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

Next Story