More
Categories: Cinema News latest news

நடிப்பை தாண்டி பிஸ்னஸிலும் காசு பார்க்கும் முன்னனி நடிகைகள்! தானே விளம்பர மாடலாக இருக்கும் நயன்

Cinema Actors: தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் சினிமாவையும் தாண்டி மற்ற பிசினஸ்களிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். நடிப்பு மட்டும் தனக்கு கை கொடுக்காது. அதனால் சொந்தமாக ஏதாவது பிசினஸ் செய்து அதன் மூலம் காசு பார்க்கும் முன்னணி நடிகர்களை பற்றி தான் இப்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல நடிகர்கள் சைடு பிசினஸ் செய்து வருகின்றனர். தென்னிந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் ஒரு முன்னணி நடிகையாகவே இருந்து வருகிறார். தற்போது நயன்தாரா லிப் பாம் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததோடு 9 ஸ்கின் கேர் என்ற பெயரில் சொந்தமாக ஒரு நிறுவனத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: ராமராஜனா கொக்கா!.. பக்காவான கதையில் பார்க்க வச்சுட்டாரே!.. சாமானியன் விமர்சனம் இதோ!..

அது மட்டுமல்லாமல் ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தனியாக தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.  அடுத்ததாக சமந்தா. டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு முன்னணி ஹீரோயின் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் முழு கவனம் செலுத்தி வரும் சமந்தா பெண்களின் ஃபேஷன் பிராண்டான சாகின் இணை நிறுவனராக இருந்து வருகிறார். நூரிஸ் யூ சஸ்டைன்கார்ட் போன்ற பிராண்களிலும் முதலீடு செய்து இருக்கிறார்.

அடுத்ததாக ராஷ்மிகா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா, ஹிந்தியில் இப்போது படு பிஸியான  நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஸ்கின் கேர் பிராண்டான பிளம் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும், நிறைய விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: கன்பார்ம் ஆச்சுங்கோ… தனுஷின் கைவசம் வந்த மல்லுவுட் வெற்றி இயக்குனர்.. அப்டேட் என்ன தெரியுமா?

இவர்களை போல பல முன்னணி நடிகர்களும் ஏதாவது ஒரு வகையில் பல பிஸ்னஸ்களை செய்து சொந்தமாக நடத்தி வருகிறார்கள். அதன் மூலம் வருங்காலத்தில் அவர்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

Published by
Rohini

Recent Posts