அயலான் படத்தில் சிவகார்த்திகேயனை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்!.. அட என்னப்பா இது!..

Published on: January 16, 2024
siva
---Advertisement---

ayalaan: சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வருடங்களாக படப்பிடிப்பில் இருந்து பொங்கல் விருந்தாக வெளியாகியுள்ள திரைப்படம்தான் அயலான். இன்று நேற்று நாளை பட இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வெளியாகி 8 வருடங்கள் ஆகிவிட்டது. அவரின் 2வது படம் இப்போதுதான் வெளியாகியிருக்கிறது.

கடந்த 4 வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் ஏலியனை வைத்து சிவகார்த்திகேயன் என்னென்ன செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ரசிகர்கள் மீது வெறுப்பை கொட்டும் அஜித்!… ஒரு காலத்தில் எப்படி இருந்தார் தெரியுமா? பிரபலம் சொல்லும் சம்பவம்!…

இப்படம் கடந்த 12ம் தேதி வெளியானது. ‘படம் பெரிய ரேஞ்சுக்கு இல்லை என்றாலும் படம் நன்றாக இருக்கிறது. படத்தில் VFX காட்சிகள் நன்றாக இருக்கிறது’ என பலரும் சொல்லி வருகிறார்கள். எனவே, இப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. அதாவது அவருக்கு ஏற்கனவே இருந்த பல கோடி கடன்களில் இந்த சம்பளம் கழிந்துவிட்டது. அதோடு, மேலும் கடனில் 30 கோடியை சிவகார்த்திகேயன் கொடுத்ததால்தான் அயலான் படமே வெளியானது.

இதையும் படிங்க: விலை போகாத லால் சலாம்!.. சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை!.. கை கொடுத்த கலாநிதி மாறன்…

இந்நிலையில், இப்படத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர், நடிகைகளை பற்றி தெரிந்துகொள்வோம். இதில், முனிஷ்காந்த் 20 லட்சமும், கருணாநகரன் 30 லட்சமும், யோகிபாபு 40 லட்சமும், பானுப்பிரியா 50 லட்சமும், இஷா கோபிகார் 70 லட்சமும், இப்படத்தில் வில்லன் நடிகர் சரத் கேல்கர் 3 கோடியும் வாங்கியுள்ளனர். அதேபோல், ரகுல் ப்ரீத் சிங் 3 கோடியை சம்பளமாக பெற்றிருக்கிறார்.

12ம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது. இன்னும் 2 நாட்கள் இப்படத்திற்கு வசூல் இருக்கும் என கணிக்கப்படுகிறது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றால் இந்த வார இறுதிவரை இப்படம் வசூலை அள்ளும் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: என்னங்க மாயா எப்படி இருக்கீங்க? போட்டி முடிஞ்சாச்சு சண்டையை ஆரம்பிச்சிடலாமா? பிரதீப்பின் வைரல் ட்வீட்

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.