விஜயிற்காக களமிறங்கிய ரசிகர் கூட்டம்… கோட் டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை…
Vijay: விஜய் நடிப்பில் இன்னும் இரண்டு தினங்களில் வெளியாக இருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் திரைப்படம் டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை செய்திருக்கும் ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார்.
இதையும் படிங்க: பரபரப்பா போயிட்டு இருந்த கூலி ஷூட்டிங்கிற்கு சூனியம் வச்சிட்டானுங்களே.. பெரிய ஆளுதான்!
முதலில் டைம் ட்ராவல் படம் எனக் கூறப்பட்ட நிலையில், இது சாதாரண கதையாக தான் இருக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜயின் அரசியல் வாழ்க்கை எண்ட்ரிக்கு முன்னர் வெளியாகும் கடைசி சில படங்களில் கோட் திரைப்படம் ஒன்றாக அமைந்துள்ளது.
இதனால் இப்படத்திற்கு ஆரம்பம் முதலே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவானது. இருந்தும் இப்படத்தின் பாடல்கள் அதில் தொய்வை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் டிரைலர் மூலம் அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறார் வெங்கட் பிரபு. இதனால் படத்தின் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
எப்போது தொடங்கும் என ஆர்வத்தில் இருந்த ரசிகர்கள் தொடங்கிய சில நொடிகளில் டிக்கெட் விற்பனையை முடித்து விடுகின்றனர். அதன்படி வரும் வியாழன் செப்டம்பர் 5ல் வெளியாகும் இப்படத்திற்கு அடுத்த நான்கு நாட்களுக்கான டிக்கெட் விற்பனைகள் முடிந்து விட்டதாம்.
இதையும் படிங்க: பொய் சொல்லலாம்.. ஆனா இப்படியா… குக் வித் கோமாளி பிரபலத்தினை கடுப்படித்த சிலம்பரசன்
இந்நிலையில் இன்னும் இரண்டு தினங்கள் ரிலீஸாக இருக்கும் நிலையில் இதுவரை புக் மை ஷோ டிக்கெட் விற்பனை ஆப்பில் 5 லட்சம் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன் லியோ படத்திற்கும் இந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அது லோகேஷ் மற்றும் எல்சியூவின் மீதான் ஆர்வம் தான் எனக் கூறப்பட்டது.
தற்போது அந்த விமர்சனங்களை ஒற்றை ஆளாக தகர்த்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். இப்படத்தில் விஜய் ஒப்பிடும்போது மிகப்பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாத நிலையில் கோட் திரைப்படத்திற்கு பெரிய அளவிலான வரவேற்பு நிலவி வருவது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.